இவரை வழிபட்டால், மூம்மூர்த்திகளின் அருளும் கிடைக்கும்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 28 Oct, 2019 10:40 pm
kanda-sashti-special-2

அழகுக்குப் பெயரெடுத்தவன் மன்மதன்.அப்படிப்பட்ட கோடிகோடி மன்மதர்களின் அழகை ஒன்று சேர்த்தால் எவ்வளவு அழகாயிருக்குமோ அத்தனை அழகானவர் சுப்ரமண்யர்.

தமிழ் தேசத்துக்கு இவர் மீது ரொம்பப் பிரியம். தமிழ்த்தெய்வம் என்றே சொல்கிறோம். தமிழில் வைதாரையும் வாழ வைப்பவர் என்று அவரைப் போற்றுகிறோம். தமிழில் அவருக்கென்று அருமையாக ஒரு பெயர்,முருகன் . 

அழகு, அருள் இரண்டும் வேறு வேறில்லை. அழகே அருள் வடிவெடுத்து, முருகனாக இருக்கிறார்.
சுப்பிரமணியரின் பெருமைகளில் மேலானது குருவாக உபதேசித்து மோட்சத்தைக் கொடுப்பது தான்.
‘குருவாய் அரர்க்கும் உபதேசம் வைத்த’ என்று அருணகிரிநாதர் சொல்றபடி, தந்தைக்கும் உபதேசம் செய்தவர். ஞானபண்டிதனாக இருப்பவர்.

அவர் நமக்கு அழகு, அறிவு, அருள், வீரதீரம், சக்தி எல்லாம் நமக்கு அருளுகிறார். 
அழகென்ற சொல்லுக்கு முருகா என்பர். முருகன் என்பதன் பொருள் அழகன்.  

முருகு என்னும் சொல்லில் தமிழின் வல்லினம்,மெல்லினம், இடையினம் ஆகிய மூன்று இன எழுத்துக்கள் உள்ளன. மெல்லினமாகிய, மு விஷ்ணுவையும், வல்லினமாகிய ரு சிவனையும், இடையினமாகிய கு பிரம்மனையும் குறிக்கும் என்பர். அதனால், முருகப்பெருமானை வழிபட்டால், மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close