வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 29 Oct, 2019 09:59 pm
special-article-about-kanda-sashti

நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் முருகனின் பிறப்புக்கு கருவாக அமைந்ததால் அவர் ‘அக்னிகர்ப்பன்' எனப்பட்டார். அப்பொறிகள் கங்கையில் தவழ்ந்ததால் ’காங்கேயன்' என்ற பெயர் வந்தது. சரவணப்பொய்கையில் வளர்ந்ததால் "சரவணபவன்' எனப்பட்டார். இதுவே முருகனுக்கு மந்திரப்பெயராக விளங்குகிறது. 

பக்தர்கள், ஆறெழுத்து மந்திரமான ஓம் சரவணபவ' என்று ஜெபிப்பர். குழந்தைவடிவில் இருந்த ஆறுகுழந்தைகளை வளர்க்கும் பணியில் கார்த்திகைப்பெண்கள் ஈடுபட்டனர். அவர்களின் பெயரால் முருகனுக்கு, ’கார்த்திகேயன்' என்ற பெயர் ஏற்பட்டது. பிள்ளையைக் காண வந்த பார்வதி அன்போடு குழந்தைகளை ஒன்று சேர்த்து அணைத்து மகிழ்ந்தாள். ஆறுமுகமும் ஒன்றாகி, ஆறுமுகன் என  பெயர் ஏற்பட்டது. 

முருகனுக்குரிய தமிழ் மந்திரமாக உள்ளது ‘வேலுமயிலும்'. இதனை "மகாமந்திரம்' என்று பாம்பன் சுவாமிகள் குறிப்பிடுகிறார். கந்தபுராணம் என்னும் கடலையே, இந்த மந்திரம் தன்னுள் அடக்கியது என்பர். அருணகிரிநாதர், கந்தர் அலங்காரத்தில் ‘வேலும் மயிலும்' மந்திரத்தை சூட்சுமமாகக் கூறுகிறார். இந்தமந்திரத்தை ‘வேலும் மயிலும்' என்று ஜெபிக்காமல், ஆறெழுத்தாக ‘வேலுமயிலும்' என்றே ஜெபிக்க வேண்டும்.

முருகன் இருக்கும் இடத்தில் வேலும், மயிலும் வீற்றிருக்கும். வேலை வணங்கினால் நம் தீவினை நீங்கும். மயிலை நினைத் தால் பயம் அகலும்.
முருகப் பெருமானது சடாச்சர மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை உருப் போட்டால் நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.இது அனுபவ உண்மை!

ஓம் ஐம்கிரிம் தோத் தஸ் ஸ்வாகா
தவிர,கந்தரனுபூதியில் உள்ள 15-வது பாடலாகிய “முருகன் குமரன் குகன் என்று மொழிந்து” என்று துவங்கும் பாடலை ஒருநாளுக்கு 108 முறை வீதம் ஜபித்து, 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வந்தாலும் நினைவாற்றல் பெருகும் .

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close