தானம் செய்யுங்க; குரு அருளை பெறுங்க!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 29 Oct, 2019 10:24 pm
article-about-gurupeyarchi

நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான், ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். இன்று அதிகாலை,  விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு  குருபகவான் இடம் பெயர்ந்துள்ளார்.

குரு பகவான் தலங்களுக்கு சென்று, அவரை வழிபடுவது சிறப்பு. குரு பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில், விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும்.

குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். 

மஞ்சள் நிற ஆடையையும், தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து, குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.தமிழகத்தீல், குரு தலங்கள் பல உள்ளன. எனினும், எல்லாருக்கும் உடன் நினைவுக்கு வருவது ஆலங்குடி ஆபத்சகாயர் கோவில் தான்,. அந்த கோவிலை பற்றி இப்போது பார்ப்போம். 

ஆலங்குடி ஆபத்சகாயர் ஆலயம் ,நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தலத்துச் சிறப்புடைய ,குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார்.  

தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான். வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. இவ்வூரில்,விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என, சொல்லப்படுகிறது. மற்ற குரு தலங்கள் பற்றி நாள் பார்க்கலாம். 

newstm.in

 

 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close