இவர்கள் கண்ணீரும் தூர்வார்க்கும்!

  பாரதி பித்தன்   | Last Modified : 30 Oct, 2019 08:11 pm
special-article-about-sujith-and-bore-well-issues

தமிழகம் இப்போது கருணை கடல்களால் ஆட்சி செய்யப்படுகிறது. வாடிய முல்லைக்கு தேர்தல் கொடுத்தான் பாரி என்று படித்து இருபோம். ஆனால் இப்போது தான் பார்க்கிறோம்.  தமிழகத்தின் ஆளும் கட்சி, எதிர்கட்சிக்கு குடிமகன்கள் மீது கொண்டுள்ள பாசத்தை பார்க்கும் போது சாம்பல் பூசியதையும் தாண்டி மயிற்கூச்சொறிகிறது.

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் இளம் பெண் டிவியில் விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி பார்த்தாளா, அல்லது சமையலில்  ஈடுபட்டாளோ, தெரியவில்லை. 2 வயது குழந்தை சுஜீத் மாயமாகிவிட்டது. தேடிப்பார்த்தால், அவர்கள் வீட்டருகே திறந்து கிடந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து விட்டது.

அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டிய கடமை உடனே அரசுக்கு வந்து விடுகிறது அல்லவா? தீயணைப்பு துறை முதல் அரசின் அனைத்து துளைகளும் அங்கே முகாம் இடுகிறது. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் அங்கேயே முகாம் இடுகிறார்கள். குழந்தை மீட்கும் பணி துரித கதியில் நடக்கிறது.

இதே குழியில் அடுத்த வீட்டு பிள்ளை வந்து விழுந்திருந்தால் சுஜீத் தந்தையோ, இந்த குழந்தை அடுத்த வீட்டு காரன் ஆழ்துளையில் விழுந்தாலோ அதன் சொந்தகாரரோ இத்தனை நேரம் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார். இது போன்ற எந்த வேதனையை தன் பெற்றோருக்கு தராமல், தன் வீட்டில் திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து தியாகம் செய்த குழந்தை சுஜித்தை பெற்ற தந்தை பிரிட்டோ பாராட்டுக்குறியவராகிறார். அவர் தாய் கலா மேரியின் இழப்பு ஈடு செய்ய முடியாததாகிறது.

அதே நேரத்தில் தொண்டு நிறுவனங்கள், டிவிக்களில் ஆஸ்தான வித்வான்கள், எல் அண்டு டி, என்எல்சி, தீயணைப்பு படையினர் 82 மணி நேரம் போராடியும், திமுக முன்னாள் அமைச்சர் நேரு, எம்பி திருச்சி சிவா போன்றவர்கள் நேரில் வந்து ஆலோசனை செய்தும், குழந்தையை உயிருடன் மீட்க முடியாத அரசு குற்றவாளியே. 

இதற்கு அவர்கள் தானே பரிகாரம் தேட வேண்டும். அதனால் சுஜித் இழப்பை ஈடுகட்ட ரூ. 20 லட்சம் அரசு வழங்குகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்கள் நலனே தங்கள் நலன் என்று வாழும் திமுக, அதன் தலைவர் ஸ்டாலின், அதிமுக மெத்தனத்திற்கு  தண்டனை வழங்கும் விதமாக தான் ஒரு 10 லட்சம் வழங்கி அதிமுகவின் இழிவைத் துடைக்கிறார்.

இதையும் தாண்டி  தாய் உள்ளம் கொண்ட ஸ்டாலின் அவர்கள் இழப்பை பொறுக்கவில்லை. பிரிட்டோவிற்கோ, கலாமேரிக்கோ அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார். ராணுவத்தை ஏன் வரவழிக்க வில்லை என்று கண்டிக்கிறார்.

ஸ்டாலின் தாய் உள்ளத்தை பார்த்து வியக்கும் தமிழ் இளைஞர்கள் அரசு வேலை பெற வேண்டுமானால் வீட்டில் ஒரு ஆழ்துளைக் கிணறு வெட்டி, அதை மூடாமல் விட்டு விட்டால் போதும், எப்பாடு பட்டாலும் ஸ்டாலின் அரசு வேலை வாங்கி தருவார் என்று எண்ணத் தொடங்கி விட்டனர்.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எல்லோரையும் விஞ்சி விட்டார். ஏதோ கலாமேரியின் மாமியார், நாத்தனார், அக்கா, தங்கை ரேஞ்சுக்கு அவர் மாறிவிட்டார்.

இப்படி தாய் உள்ளம் கொண்டவர்கள் தமிழகம் ஆள என்ன தவம் செய்து இருக்க வேண்டும்.

தில்லானா மோகனாம்பாளில் ஜில் ஜில் ராமாமணி, சிக்கல் சண்முகசுந்தரத்திடம் உங்கள் நாதஸ்வரத்தில் தான் இப்படி வருதா? எல்லா நாதஸ்வரத்திலேயேயும் இப்படித்தான் வருமா என்று அப்பாவியாக கேட்பது போலவே எனக்கும் ஒரு கேள்வி எழுகிறது.

தமிழக அரசு, எதிர்கட்சி, இன்ன பிற அரசியல்வாதிகள் தாய் உள்ளம் மணப்பாறையில் மட்டும் தான் வெளிப்படுமா? அல்லது எல்லா சம்பவத்திலும் தெரிய வருமா என்பது தான் அது.

சுஜித் மீட்பு பணியை ஒரு சில விஷ்வல் நக்சல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தனர். ஆயிரம் விளம்பரங்கள் இடையே ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்த்தே தங்களை மறந்துவிடும் தமிழச்சிகள், இது போன்ற நெஞ்சம் கனக்க வைக்கும் நேரலையை பார்க்கும் போது கலாமேரியை போலவே 2வயது குழந்தையை பெற்ற துாத்துக்குடி நிஷாவால் மட்டும் எப்படி அன்றாடப் பணிகளை கவனிக்க முடியும். 

வெளியே மழை, உள்ளே சோகத்தில் மனைவியின் கண்ணீர் மழை. இந்த சூழ்நிலையில்  நிஷாவின் கணவர் லிங்கேஸ்வரன் மீன்பிடிக்க செல்ல முடியுமா? இருவரும் சுஜித் வில்சன் மீட்பை பார்த்து அவனை உயிருடன் வர வேண்டும் என்ற கவலையில் ஆழ்ந்திருனர். அந்த நேரத்தில் அவர்கள் மகள் ரேவதிசஞ்சனா அவர்கள் இடம் இருந்து எழுந்து மாயானார்.

இயல்பு வாழ்க்கைக்கு லிங்கேஸ்வரன், நிஷா திரும்பியதும் மகளை தேடிய போது அந்த பெண் குழந்தையும் சுஜித் போலவே அவர்கள் வீட்டில் இருந்த பாத்ரூமில் உள்ள நீர் தொட்டியில் தலைகுப்புற விழந்து மூச்சு திணறி இறந்துவிட்டது. ஊரார் சோகத்தில் பங்கு கொண்ட இந்த தம்பதி சோகத்தில் வீழ்ந்து விட்டனர்.

ஆனால் சோகத்துடன் சோகமுமாக இது குறித்து விஷ்வல் நக்சல்கள் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. இதனால் இதை தடுக்க வேண்டும் என்ற எண்ணமே தமிழக அரசுக்கு இல்லை. தமிழக அமைச்சர்கள் யாரும் அங்கு சென்று தங்கவில்லை. ஜோதிமணி இணையாக கனிமொழி அங்கு சென்று  ஆறுதல் சொல்லவில்லை. இதில் அவர்கள் செய்த ஒரே தவறு இவர்கள் எல்லாம் வரும் வரை காத்திருக்காமல் குழந்தையை தொட்டியில் இருந்து எடுத்தது தான்.

ஆனாலும் கலாமேரி, பிரிட்டோ தம்பதிக்கும் இவர்களின் சோகமும் ஒன்று தான். எனவே ஸ்டாலின் அவர்கள் 5லட்சம் ரூபாயாவது இழப்பீடு கொடுத்து, ஒரு கார்ப்ரேஷன் வேலையாவது லிகேஸ்வரனுக்கு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தலாம். 

அதிமுக அரசு லிங்கேஸ்வரன் வீட்டு பாத்ரூமில் தண்ணீர் டிரம் திறந்து கிடந்ததற்கு பொறுப்பேற்க வேண்டும். இதற்காக ரூ. 10 லட்சமாக நிர்வாணமாக வழங்க வேண்டும். விஷ்வல் நக்சல்கள் இதை லைவ் வாக ஒளிபரப்பாதற்கு பொதுமனிப்பு கேட்க வேண்டும்.

கோர்ட்டும் கூட பாத்ரூமில் திறந்து கிடக்கும் தொட்டிகளை மூட தேவையான விதிமுறைகளை உருவாக்கி அதனை உள்ளாட்சி நிர்வாகம் கடைபிடிக்க உத்தரவிட வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பிற்கு பணியாளர்கள் வீடுகளில் புகுந்து கொசு உற்பத்தி காரணிகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுவது போல பாத்ரூமில் புகுந்து சோதிக்கவும் பணியாளர்களை கட்டாயப்படுத்தலாம்.

இதை எல்லாவற்றையும் மீறி ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாப்பாக வாழ்கிறார்களா என்று கண்காணிக்க வீட்டுக்கு ஒருவர் வீதம் மக்கள் பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்கலாம்.

அப்போதுதான் தற்போது 100 சதவீதம் தாய் உள்ளம் கொண்டவர்கள் தான் தமிழக ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, உள்ளிட்ட அரசியல்வாதிகள் என்று நிரூபிக்க முடியும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close