ஷீரடி சாய் வரலாறும், அதிசயங்களும் - 1

  Newstm Desk   | Last Modified : 05 Sep, 2019 09:44 am
sai-baba-in-shirdi

“ஷீரடி” என்பது ஒரு கிராமம். இது  மகாராஷ்டிரா மாநிலத்தில், கோதாவரி நதி பாயும் பகுதியான அகமத் நகர் மாவட்டத்திலுள்ள கோபர்கான் என்னும்  இடத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அச்சமயத்தில் அங்கே சுமார் 400 முதல் 500 வீடுகள் மட்டுமே இருந்தன.  அங்கே பெருமளவு இந்துக்கள் மட்டுமே இருந்தனர். சிறிய அளவு மட்டுமே முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த கிராமத்தில் ஒதுக்குப்புறமாக ஒரு வேப்பமரம் இருந்தது. அம்மரத்தின் கீழே அழுக்கான நைந்த ஒரு சிறிய கைக்குட்டை ஒன்றினைத் தலையில்  கட்டியவாறு முஸ்லிம் இளைஞர் போன்ற தோற்றத்தில் பதினாறு வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருந்தார். 

அவர் 24 மணிநேரமும் ஆழ்ந்த தியானத்திலேயே இருந்து வந்தார். அவ்வப்போது காட்டுகுள் சென்று மறைந்து விடுவார். அங்கே மணிக்கணக்காச் சுற்றித்திரிவார். எதைத்தேடி அவரது அலைச்சல் இருந்தது என்பது யாருக்கும் தெரியாது.  பின்னர் அந்த வேப்பமரத்தின் கீழே அவராகவே வெட்டி வைத்திருந்த பள்ளத்தில் படுத்து உறங்குவார்.

அந்தக் கிராமத்து மக்கள் இந்த இளைஞனை வியப்பாக பார்த்தனர். அப்போது இவர் யார், எதற்காக இங்கே வந்திருக்கிறார், அவருக்கு என்ன வேண்டும் என்றெல்லாம் கேட்பார்கள். ஆனால் எதற்குமே அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காது. அந்த மக்களுடன் எவ்விதப் பழக்கமும் அவர்  வைத்து கொள்ளவில்லை. அவர் 
பசிக்கும் போது என்ன உண்கிறார் என்பது கூட அம்மக்களுக்கு தெரியாது.

அதனால் , அந்த இளைஞருக்கு மனநோய் என்றும், புத்திசுவாதினம் இல்லாதவர் என்றும் பலரும் நினைத்தனர். அதனால் அவரை அக்கிரமத்து மக்கள் மதிப்பதோ, மரியாதை தருவதோ இல்லாமல் அவரை ஒரு மனிதனாக கூட நடத்துவது இல்லை. சிறு பிள்ளைகள் அவர் மீது கல்லெரிந்து விளையாடினர்.

ஆனாலும் அந்த இளைஞர் அப்பிள்ளைகளிடம் அவரின் அன்பு சிறிதளவும் குறையாமல், சினேகத்துடன் விளையாடிக் கொண்டு வந்தார். ஆனால், இந்த  ஃபக்கீர் இளைஞன் சாதாரண ஆள் இல்லை என்றும், இவன் சில அபூர்வ சக்திகளைக் கொண்டவன் என்றும் அக்கிராமத்தின் கோயில் பூசாரியும், நகை வியாபாரியுமான மகள் சபதியும், அவரது ஒருசில நண்பர்களும் மட்டும் உணர்ந்திருந்தனர்.

மேலும் பையாஜி என்று அழைக்கப்படும் பெண்மணி ஒருவர் அந்த ஃபக்கிரின் தூய உள்ளதாலும் இறைவடவமிக்க தோற்றத்தாலும் கவரப்பட்டு, அன்பு செலுத்தி வந்தார். அந்த இளைஞனுக்கு உணவு அளித்து இன்பம் அடைந்துள்ளார். சில நேரங்களில் உணவை மறுத்துவிட்டு காட்டுகுள் ஓடி விடுவார்.ஃபக்கீர். அப்போது இந்த பெண்மணியும் கூடவே ஓடி ,  இளைஞன் சாப்பிட்ட பின்னரே ஓய்ந்திருக்கிறார். அந்த இளைஞன்   சாப்பிட்ட பின்னரே சாப்பிடுவது என்ற பழக்கத்தை பையாஜி கடைபிடித்து வருகிறார்.

1854 ஆம் ஆண்டு தனது 16 வயதில் ஷீரடில் திடீரென சுயம்புவாக தோன்றிய அந்த இளைஞன், மூன்றாவது ஆண்டில் ,அதாவது 1857 ஆம் ஆண்டு வாக்கில் திடீரென காணாமல் போய்விட்டார். அந்த இளைஞன் இங்கே ஏன் வந்தான், எங்கே போனான், என்ன நோக்கத்திற்காக வந்தான் என்ற கேள்வி அந்த கிராம மக்களிடத்தில் இருந்தாலும் இதற்கான விடை யாருக்கும் தெரியாது. அதைப்பற்றி யாரும் பெரிதாக கவலை படவும் இல்லை. அவரவர் வேலையை மட்டுமே பார்த்தார்கள்.  காலபோக்கில் அந்த இளைஞனை அவர்கள் மறந்தே போனார்கள். ஆனால் நாம் மறக்கலாமா. எங்கே சென்றார் அந்த இளைஞர்?.
                                                               

    வி. ராமசுந்தரம்
  ஆன்மீக எழுத்தாளர்
 EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

(தொடரும்)
               

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close