காணமல் போன குதிரையை கண்டுப்பிடித்த சாய்பாபா!

  Newstm Desk   | Last Modified : 05 Sep, 2019 10:53 am
history-of-shirdi-saibaba

 "தூப்" என்பது ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். அவ்வூரில் "சாந்த் பாட்டீல்"  என்ற ஒரு பெண்மணி வசித்து வந்தார். ஒரு நாள் அப்பெண்மணியின் குதிரை காணாமல் போனது. அக்குதிரையின் மீது அவர் அதித அன்பையும்,  பாசத்தையும்  வைத்திருந்தால் அவரால் குதிரை காணாமல் போனதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எல்லா இடங்களிலும் தேடினார். காடு, மலை, மேடு என்று பல இடங்களிலும் இரண்டு மாத காலமாகியும் தேடி கிடைக்க வில்லை. இப்படி தேடி கொண்டே  ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தார் சாந்த் பாட்டீல்.  ஒரு மாமரத்தின் கீழே தலையில் குல்லா போன்ற ஒரு துணியைக் கட்டிக்கொண்டு, நீண்ட கம்பளி உடையுடன், பருமனான தாடியோடு ஒரு இளைஞன் இருந்தார். ஹூக்கா குடிப்பதற்கு அந்த இளைஞன் ஃபக்கீர்  தயாராகிக்கொண்டு இருந்தார். அப்போது  அங்கு வந்த பாட்டீல் அந்த இளைஞனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே அருகில் சென்றார்.  மெதுவாக அவரிடம் சென்று பேச தொடங்கினார். அப்போது பாட்டீலின்  முகத்தை பார்த்த அந்த இளைஞர் என்ன வேண்டும் என்று கேட்பது போல பாட்டீலை உற்று நோக்கினார். அதனை புரிந்துக்கொண்ட பாட்டீல் தனது பாசமாக வளர்த்த பெண்குதிரை காணாமல் போனது. அதனை இரண்டு மாத காலமாக  தேடி அலைவதையும், கவலையுடன் கூறினார்.

அப்போது அந்த  இளைஞர் பாட்டீலை  நோக்கி, கவலைபடதே  பக்கத்தில் உள்ள ஒடைக்கு சென்று பார் அங்கே  உன் குதிரையை இருக்கும் என்று கூறி இருக்கிறார். அதனை கேட்டதும், பாட்டீல் ஓருவித சந்தேகத்துடனே அங்கிருந்து உடனே கிளம்பி ஓடைக்கு சென்று பார்த்தால். அப்போது என்ன ஆச்சரியம்  அங்கே புற்களை மேய்ந்து கொண்டிந்த தனது குதிரையை கண்டு அதிசயத்தில் திகைத்து போய் நின்றாள்.

பாட்டீலுக்கு, பெரும் வியப்பாகவும், அதித மகிழ்ச்சியிலும் புல்லரித்து விட்டது. உடனே அவளின் குதிரையை பிடித்துக்கொண்டு இளைஞர் பக்கீரிடம் ஓடி வந்து நன்றி  கூறினால்.அப்போது பக்கீர், தன்னோடு அமர்ந்து  பாட்டீலை ஹூக்கா குடிக்க சொன்னார். சரியென பாட்டீலும்  அவர் அருகே அமர்ந்தார். அப்போது , ஹூக்காவின் குழாயைக் கையிலெடுத்து, மற்றொரு கையால் தன்வசமிருந்த கம்பினால் பூமியைத் தட்ட, அங்கே நீர் ஊற்றாய்ப் பெருகியது. அதில் மண்குழாயின் சூட்டினைத் திணித்தார். பின்னர் மறுபடியும் இதேப்போல் பூமியை தட்ட, நெருப்பு உருவாகிது. அதில் ஹுக்காவை சூடேற்றி, லாவகமாகப் புகைக்கத் தொடங்கினார்.

இந்த அற்புதங்களை நேரில் பார்த்த பாட்டீல் வெலவெலத்துப்போனார். பாட்டீல் , ஃபக்கீர் செய்வதை கண்டு வியந்து போனாள். என்ன செய்கிறார் இவர்? . தண்ணீரையும், நெருப்பையும் வரவழைக்கும் இவர் மந்திரவாதியா?. பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை. பிறர் வியந்து தன்பக்கமாக அவர்களின் சிந்தனையைக் கவர வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிற  இளைஞர் போலவும் தெரிய வில்லை. அப்போது இவர் யார்?. இறை சக்தியும், சித்த சக்தியும் உடைய ஒரு மகான் என்பது அவருக்கு புரிந்து விட்டது. இந்த இளைஞரை தன்னுடன் அழைத்துச் போக நினைத்து ஃபக்கீரை வற்புறுத்தி அழைத்தார் பாட்டீல்.  ஃபக்கீரும் பாட்டீலுடன் அவரது கிராமத்திற்கு செல்ல சம்மதம் தெரிவித்து பாட்டீலின் கிராமத்திற்கு சென்றார்.  பாட்டீலீன் இல்லத்தில் சிறப்பு விருந்தினராக  சில காலம் இருந்தார் ஃபக்கீர். 


     

     வி. ராமசுந்தரம்
  ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close