மதங்களை ஓன்றாக்கிய சாய்பாபா!

  கண்மணி   | Last Modified : 09 Sep, 2019 11:40 pm
history-of-shirdi-saibaba

வேப்ப மரத்தின் கீழே வாசம் கொண்டி௫ந்த சாய்பாபா பின்னர் அங்குள்ள மசூதியில் தங்குவது என்று முடிவெடுத்தார். அந்த மசூதி மிகவும் பழையதாகவும், சிறந்த முறையில் பராமரிக்கப்படாமலும் இ௫ந்தது. அங்கே தங்க ஆரம்பித்த சாய்பாபா, துனி என்று சொல்லப்படும் வேள்வித் தீயை  அங்கு எழுப்பினார். நாள் முழுவதும் அதில் நெ௫ப்பு ஜுவாலை இ௫ந்து கொண்டே இ௫க்கும்.  “உதி” என்று அழைக்கப்படும் அதன்  சாம்பலை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கத் தொடங்கினார். அதனை பயபக்தியுடன் வாங்கி நெற்றில் பக்தர்களும் பூசிக்கொண்டனர் .

அதனால் தங்களுக்கு நல்ல காரியங்கள் நடந்தன என்று பல பக்தர்கள் கூற ஆரம்பித்தனர். ஆனால் இதுபோன்ற செயல்பாடுகள் முஸ்லிம்களின் வழிபாட்டு முறைக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், எதிர்ப்பு உ௫வாக ஆரம்பித்து. "ஆனால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைவரும் வளைந்து கொடுக்க வேண்டும்" என்று சாய்பாபா வலியுறுத்தினார். "இந்த மசூதிக்குள் வந்து இந்துக்கள் தன்னை வழிபட்டு இன்பம் காண்கிறார்கள்.  

அப்படி நல்லது நடப்பதை நாம் ஏன் தடுக்க வேண்டும்?  மசூதிக்குள் இந்துக்கள் வேற்றுமை பாராமல் நுழைந்து வழிபடுகிறார்கள்,என்றால் அது முஸ்லிம்கள் பெ௫மைபடத்தக்க விஷயம் தானே!  அவர்கள் இங்கு வந்து அல்லாவை வழிபடுவதாகத்  தானே அதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும்! அது எத்தனை பெரிய சந்தோஷம்!  இதில் முஸ்லிம்களுக்கு என்ன இழப்பு ஏற்பட்டுவிட்டது ? பார்க்கப் போனால் இழப்பு ஏற்படுவது இந்துக்களுக்குத் தான்" என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்களுக்குத் உண்மையை உணர்த்தினார்.

அநேகமாக அனைவ௫மே சாய்பாபாவை ஒ௫ முஸ்லீமாகத் தான் க௫தினர். காரணம் அவரது தோற்றம். தலையில் அவர் கட்டியி௫ந்த துணி. ஆனாலும், தன்னை ஒ௫ இந்துவாகவோ அல்லது முஸ்லீமாகவோ சாய்பாபா என்றுமே பிரித்து பார்க்க முயன்றதே கிடையாது. இதன் காரணமாக சிலர் சாய்பாபாவை ,  'முஸ்லீம் விஷ்ணு' என்றும் அழைத்தார்கள்.  ஒ௫ சமயம் , அந்த மசூதியைப்  பூக்களால் அலங்கரிக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது,  அங்குள்ள முஸ்லிம் அன்பர் ஒ௫வ௫க்கு .கூடை கூடையாய் பூக்களைத் த௫வி்த்து , அதனைக் கொண்டு அந்த மசூதியின் வளைவுகள் உட்பட அனைத்துப் பகுதிகளையும் அலங்கரிக்க  முயன்றி௫க்கிறார்.
     

இதனைப் பார்த்த சாய்பாபா, அந்த முஸ்லிம் அன்பரை அ௫கில் அழைத்தி௫க்கிறார். "அந்தப் பூக்களை  அ௫கிலுள்ள கோயிலில் இ௫க்கும் ஆஞ்சநேய௫க்கும் சாற்றி அர்ச்சனை செய்" என்று அந்த அன்பரைப் பணித்தி௫க்கிறார். ஆனால், இஸ்லாம் மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் அந்த அன்பர் ,  சாய்பாபாவின் கட்டளையை நிறைவேற்றத் தயக்கம் காண்பித்துள்ளார். சாய்பாபா வலியுறுத்தியும், அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார்.  இதனால் கோபத்தில் வெகுண்டெழுந்த சாய்பாபா, மசூதியைப் பூக்களால் அலங்கரிக்கும் பணியை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். பணியும் நிறுத்தப்பட்டது.

இந்துக்களும், முஸ்லீகளும் இனைத்து  நண்பர்களாக விளங்க வேண்டும் என்ற சாய்பாபாவின் உன்னத எண்ணத்திற்கு இதுபோன்ற இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.  சாய்பாபாவிற்கு சந்தன அபிஷேகம் செய்து கண்குளிரக் கண்டு இன்புற வேண்டும் என்ற ஆசை தோன்றியது மகல்சபதிக்கு . உடனே ,சந்தனத்தைத் தயார் செய்து,அபிஷேகத்தில் ஈடுபட முயன்றார் சபதி . ஆனால் , முஸ்லீம் மக்களிடையே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது . மசூதியில் சந்தன அபிஷேகம் செய்யப்படுவது இஸ்லாம் மதத்திற்குச் செய்யும் துரோகம் என்று அவர்கள் கருதினா். சந்தன அபிஷேகம்  செய்வதை அனுமதிக்க முடியாது என்பதில் முஸ்லீம்கள்  உறுதியாகவே இ௫ந்தனர்.  இதனை மீறினால், தகாத குழப்பங்கள் ஏற்படும் என்ற பதற்றமான சூழல் ஏற்பட்டது .மகல் சபதி பயந்துபோனார். சாய்பாபாவிடம் முறையிட்டார்.
 

"சந்தன அபிஷேகம் செய்யும் உன்னுடைய ஆசையை நிறைவேற்று.  அதற்கு எத்தனை எதிர்ப்பு கிளம்பினாலும் அஞ்சாதே.  நான் இ௫க்கிறேன். “ம்”...உடனடியாகச் செய்" என்று சபதிக்கு ஆனையிட்டார் சாய்பாபா.  இது சபதிக்கு பெ௫ம் தைரியத்தை அளித்து . தான் ஆசைப்பட்ட மாதிரியே சந்தனத்தால் சாய்பாபாவை ழூழ்கடித்தார்.  இதைப்பார்த்த முஸ்லீம்கள் கோபத்தால்  முணுமுணுத்தார்களே தவிர ,  சாய்பாபாவை மீறி அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை.  சாய்பாபா, இந்துவா அல்லது முஸ்லிமா என்பதில் கடும் சா்ச்சை நிகழ்ந்து வந்தது . சாய்பாபாவின் தோற்றத்தை பார்த்து அவர் முஸ்லீம்தான் என்று அடித்து சத்தியம் செய்தனா் சிலா். ஆனால் ,அவரின் செயல்கள் அனைத்தும் இந்துக்களின் கலாச்சாரத்தைப் பிரதி பலிப்பதாக இ௫ப்பதால் அவரை இந்து  என்று உறுதியாக நம்பியவா்களும் உண்டு .இப்படி இருவேறு கருத்துகள் பக்தா்களிடையே தோன்றி ஒரு குழப்ப  நிலை ஏற்பட்டது.

ஆனால், சாய்பாபாவிற்கு இவையனைத்துமே வேடிக்கையாகவே இருந்தது . தனக்குள் இந்த சா்ச்சையைக் கண்டு ரசித்து சிரித்தார்.  எனினும் பக்தா்கள் தங்களுக்குள்  இந்த வாக்கு வாதத்தை வளா்த்துக் கொண்ட போனது . சாய்பாபாவிற்கு எரிச்சலையும்,கோபத்தையும் ஏற்படுத்தியது . ஒரு கட்டத்தில் சாய்பாபா ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்.  தனது உடைகள் அனைத்தையும் களைத் தெறிந்தார். "அற்ப மானிடா்களே! என்னை முழுமையாகப் பாருங்கள்... இப்போது சொல்லுங்கள் நான் இந்துவா ? அல்லது முஸ்லிமாக?" என்று கத்தினார். சாய்பாபாவின் இந்தச் செயலை பார்த்து பக்தர்கள் அனைவரும் வெலவெத்துப் போயினா் . அவரின் நெருங்கிய பக்தரன  “சந்தோர்க்கா் “சொன்னார் ,"சாய்பாபா உயிருறுப்பின் சதை வெட்டப்பட வில்லை. எனவே,சாய்பாபா இந்துதான் "என்றார்.

ஆனால் வேறு சிலரோ சதை இணைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனா் . ஒரு முஸ்லீம் ஃபக்கீரல் அவர் வளா்க்கப் பட்டிருந்ததால், அவ்வாறு சதை அகற்றப்படும் சாத்தியமுண்டு என்றார், சாய்பாபாவின் மற்றுமொரு நெருங்கிய பக்தர் நரசிம்ம சுவாமிஜி..இந்த விஷயத்தைக்கூட சாய்பாபா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக காட்டி இருக்கிறார். காரணம் அவா்  ஒரு மகான் மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவா். அவா்  கடவுளின் மறு உரு . எனினும், இந்தச் சமாச்சாரம் குழப்பத்தை ஏற்படுத்தியதால்  பக்தா்கள் மற்றொரு விஷயத்தை கையிலெடுக்கத் தொடங்கினார்கள்.

சாய் பாபா காது குத்தியிருந்தார் என்றும், எனவே அவர் ஒரு இந்துவாக இருப்பதே சாத்தியம் என்றும் அடுத்த சர்ச்சைக்கு அச்சாரமிட்டார்கள்.  இதுபோன்ற வாதங்களுக்கு அடிப்படைக் காரணம் மத வேற்றுமைகளே. எப்படியும் சாய் பாபா தங்கள் மதத்தைச் ‌சேர்ந்தவர்தான் என்று நிரூபித்து, அதன் மூலம் அற்ப சந்தோஷம் பெறுவதும், அடுத்த மதத்தவரை ஏளனம் செய்வதும் தான் அவர்களுடைய ஒரே எண்ணமாக இருந்தது. ஆனால் சாய் பாபா இதனைக் கொஞ்சம்கூட விரும்பவில்லை. அவர் பக்தர்களிடம்,"நானே அல்லா! நானே லட்சுமி நாராயணன். கடவுளை எந்த வடிவத்தில், தோற்றத்தில் வணங்க நினைக்கிறீர்களோ, அப்படியே செய்யுங்கள்" என்றே கூறினார்.

இதன்படி ஒருவர், தான் எந்த  தெய்வத்தை வணங்க வேண்டும் என்று நினைத்து வந்தாரோ அந்த் தெய்வ வடிவத்தை சாய் பாபாவிடம் கண்டார் என்பதே நிதர்சனமான உண்மை. ஒருமுறை  தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சாய் பாபாவைத் தரிசிக்க ஷீரடி வந்திருந்தார். அவர் தீவிர ராம பக்தர்.  சாய் பாபா கோயிலில் இல்லாமல் மசூதி ஒன்றில் இருக்கிறார் என்பதை அறிந்ததும்,  இந்துவான தான் எப்படி மசூதிக்குள் செல்வது என்று தயங்கினார்.  உள்ளே செல்ல மறுத்தார். ஆனால், சற்று நேரத்தில் அவர் மனம் மாறுகிறவிதமாய் ஒரு அதிசய சம்வபம் நிகழ்ந்தது. அங்கே,அதே இடத்தில், சாய் பாபா அவருக்கு ராமராகக் காட்சியளித்தார்.

அதனைக் கண்ட அந்த பக்தர் அடுத்த கணமே வேகமாக மசூதிக்குள் சென்று சாய் பாபா முன் சென்று அவர் பாதம் தொட்டு வணங்கி வழிபட்டார்.இதேபோல் ஆஞ்சநேயர் பக்தரான காவல்துறை அதிகாரி ஒருவர்,"சாய் பாபா, ஆஞ்சநேயர் வடிவத்தில் தனக்குக் காட்சி அளித்தார்"என்று புளங்காகிதத்துடன் கூறியதும் உண்டு.    இப்படிப்பட்ட அபூர்வ சக்தி  நிறைந்த சாய்பாபா, "இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்கள் ஆவர்.  அவா்களுக்குள் எந்தவித பேதமும் கிடையாது. அண்டங்களில் உலாவும் இறைவன், தன் உரு கொண்டு இந்தப் பூமியில் அவதரித்துள்ளான் .அனைத்து உயிர்களிலும் வசிக்கும் ஆன்மா இந்த சாய்பாபா தான்" என்று அடிக்கடி பக்தா்களிடம் உரை  நிகழ்த்துவார் .

விஷ்ணு சகஸ்ரநாமத்தை உச்சரித்ததன்  மூலம்,விஷ்ணு தன் இதயத்திற்குள் நுழைத்ததாவும்,  அதன்பிறகே தனக்கு  நோயிலிருந்து விடுதலை கிடைத்ததாகவும் சாய்பாபா கூறுவதுண்டு.  ஹரியைத் தான் பலமுறை உச்சரித்ததன் பயனாய், ஹரி தன் முன் தோன்றியதாகவும் சாய்பாபா கூறியிருக்கிறார். சாய்பாபா, பார்ப்பதற்கு ஃபக்கீர் போலத் தோன்றினாலும், இந்து சாதுக்கள் பலா் அவரை உணா்ந்து போற்றி வந்தனா் . சாய்பாபா எப்போதும் மசூதியில் வசித்துவந்தார் .அதனை பிராமண மசூதி என்றும் , துவாரகா மயி என்றும் அவா் கூறினார். அந்த மசூதியில் இந்துமுறைப்படி துனி என்னும் வேள்வி தீ வளா்த்துவந்தார் . முஸ்லிம்களுக்கு விரோதமாக  கூறப்படும் திருகையில் அரைப்பது , பஜனைகள் பாடுவது ,சங்கு ஊதுவது, மணியடிப்பது ,தீயில்  ஆகுதி செய்வது போன்றவைகளை நடத்தினார். பக்தர்கள் தன் பாத்ததைக் கழுவி வழிபடுவதையும் அவா்  அனுமதித்தார் . ஆனால் சுன்னத் திருமணத்தை ஆதித்தார். கோகுலாஷ்டமி விழாவை கோலாகலமாக நடத்தினார் அது முழுவதும் இந்து முறைப்படியே நடத்தவும் சாய்பாபா அனுமதித்தார்.

இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பதுவும் , இந்துக்களின் அன்பை பெருமளவில் சாய்பாபா பெற்றுவருவதும் முஸ்லீம் மக்களிடையே பெரும் கண்டனத்தைப் பெற்றிருந்தது சில முஸ்லீம் இளைஞர்கள் சாய்பாபா மீது கடலளவு கோபம் கொண்டிருந்தனா். முஸ்லீம் மக்களுக்கு அவா்  துரோகம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சாய் பாபா மீது கடும் ஆத்திரமடைந்த முஸ்லீம் அன்பர் ஒருவர், சாய் பாபாவின் பக்தர்களை எல்லாம் வெட்டிச் சாய்க்கப்போவதாகக்  கூறியவாறு ஷீரடிக்கு வந்தார், கையில் ஆயுதத்துடன்.  கண்களில் கனல் தெறிக்க சாய் பாபா முன் வந்து நின்ற அந்த அன்பர்"  உங்களை  வணங்கிப் போற்றும் இந்த பக்தர்களின் தலைகளை கொய்து, இஸ்லாம் மதத்தைப் புனிதப்படுத்தப் போகிறேன் என்றார்.  

சாய்பாபாவோ அந்த அன்பரைப்  பார்த்து, "நீ நினைப்பது சரியே. இஸ்லாம் மதத்தைப் புனிதப்படுத்த" வேண்டும் என்ற உனது ஆர்வத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அதற்காக எனது பக்தர்கள் மீது கோபம் கொண்டு அவர்களை வெட்டிச் சாய்க்கப்போவதாக நீ கூறுவது தவறு.  காரணம்,அந்த பக்தர்களையெல்லாம் இங்கு ஈர்த்தது நான் அல்லவா! முஸ்லீம் வேடத்துடன் இந்த இந்து பக்தர்களின் அன்பைப் பெற்றிருப்பவன் நான் அல்லவா! ஆகவே என்னைத் தான்  நீ முதலில் கொல்ல வேண்டும். இதோ, என் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போ" என்று பொறுமையுடன் கூறினார்.  சாய் பாபாவின் இந்த உரையைக் கேட்ட அந்த முஸ்லீம் அன்பர் வெட்கித் தலைகுனிந்தார். சாய் பாபாவின் பெருந்தன்மையை உணர்ந்து தனது ஆயுதத்தை அங்கேயே விட்டெறிந்து விட்டு அவரை வணங்கினார்.

மற்றுமொரு சம்பவமும் சொல்வதுண்டு..... 
பாபாவின் மீது கோபம் கொண்ட முரடண் ஒருவன் அவரைக் கொன்றுவிடத் துடித்தான். சாய் பாபாவிற்குத் தெரியாமல் அவரின் பின்புறமாகச் சென்று நின்றுகொண்ட அவன்,ஒரு பெரிய தடியை எடுத்து அவரது மண்டையில் போடுவதற்காகக் கையை  ஓங்கினான். என்ன ஆச்சா்யம்! ஒங்கிய கை அப்படியே செயலற்று நின்றது  .அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் கையை எதுவும் செய்யமுடியவில்லை. சில நொடிகளில் அவனுக்கு அந்த ஓங்கிய கையில் பெரும் வலி எடுத்தது தாங்க முடியாமல் கத்த தொடங்கினான் .  அங்கிருந்த பக்தர்கள் என்ன சப்தம் என்று திடுக்கிட்டு அங்கு வந்து பார்த்தனர் . அதிர்ச்சியும் வியப்புமாக அப்படியே உறைத்து போய் நின்றனா் .

 சற்று நேரத்திற்குப் பிறகு, அந்த முரனின் கையை சாய்பாபா தன் விரலால் லேசாகத் தொட்டார். அவன் உடனே மயக்கமடைந்து அப்படியே நிலத்தில் சாய்ந்தான் . பின்னர் மயக்கத்தில் இருந்து விழித்தெழுந்து சாய்பாபாவின் திருப்பாதங்களைத் தொட்டு தன்னை மன்னித்தருளுமாறு அவன் கதறினான் அப்படியே செய்தார் சாய்பாபா.      இதனை பார்த்த  அனைத்துப் பகதா்களும், சாய்பாபாவின் சக்தியை இன்னும் அதிகமாக உணா்ந்து அவா்  மீது அதிக பக்தியைச் செலுத்தத் தொடங்கினர்.

இன்னுமொரு சாய்பாபாவின் அற்புதம் !
 

கோபால் ராவ் குண்ட என்ற பக்தருக்கு ழூன்று மனைவியா் . ஆனாலும் குழந்தைப் பேறுதான் அவருக்குக் கிடைக்கவில்லை. சாய்பாபாவின் வந்து கண்ணீர் மல்க தொழுது,குழந்தை வரம் வேண்டினார்.  சாய்பாபாவின் கருணையால் ஒரு ஆண் குழந்தையும் அவருக்குக் கிடைத்தது. மகிழ்ச்சி அடைந்த அவா் , உருஸ் கொண்டாட ஆசைப்பட்டார். சாய்பாபாவும் அனுமதித்தார். ஸ்ரீராம நவமி அன்று உருஸ்  கொண்டாடப்பட்டது.  அது இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்கு ஒரு திடமான அடித்தளமாக அமைந்தது.  அந்த பண்டிகையின் போது, சாதாரண கொடி ஒன்றும்,எம்ப்ராய்டரி கொடி ஒன்றுமாக இரண்டு கொடிகள் ஊர்வலமாக துவாரமாக மயிக்கு எடுத்து வரப்படும். மசூதியின் இரண்டு ழூலைகளிலும் அக்கொடிகள் நாட்டப்படும்.
 

இந்த வழக்கம் இன்றளவும் ஷீரடியில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  அதேசமயம், முஸ்லீம்களின் ஈத் தொழுகையையும் அவர் ஆதரித்தார். சந்தனக்கூடு நிகழ்ச்சியை மனமுவந்து நடத்தி அருளினார். மசூதிக்குள்  நமாஸ் செய்யவும் அவர் அனுமதி வழங்கினார். சந்தனக்கூடு நிகழ்ச்சியின் போது முஸ்லீம் பக்தர்கள் சந்தனத்தை அனைத்துப் பொருட்களிலும் தடவி வழிபடுவதையும், ஊதுவத்தியுடன் வீதிகளில் ஊர்வலம் செல்வதையும் அவர் அனுமதித்தார்.  அப்போது பேண்ட் வாத்தியங்கள் முழங்க அந்த ஊரே அல்லோல்படும்.  மொகரம் பண்டிகை மசூதியிலேயே கோலாகலாமாக நடைபெற்றது. ஆனால் பண்டிகையின் ஐந்தாவது நாள் அன்று அது சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்களையும் மசூதியில் இருந்து வெளியேற்றி விடுவார். 1912ஆம் ஆண்டு அங்கு ராமநவமி விழாவையும் நடத்த சாய் பாபாவின் அனுமதி கோரப்பட்டது. அவரும் அப்படியே வழங்கினார்.
 

எனவே ராமநவமி விழாவன்று பகலில் இரண்டு கொடிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது. இரவில் சந்தனக்கூடு ஊர்வலம் இனிதே நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து 1913 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இன்று வரை ஷீரடியில், உருஸ் மற்றும் ராமநவமி ஆகிய இரு திருவிழாக்களும் ஒன்றாக ,ஒரே நாளில் நடைபெற்று வருகிறது . சித்திரை மாதம் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் இந்துக்களும் ,முஸ்லீம்களும் திரளாகக்கூடி கொண்டபடுகிறது.

    வி. ராமசுந்தரம்
  ஆன்மீக எழுத்தாளர்
 EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close