கா்வத்தை அடக்கிய சாய்பாபா!

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2019 12:50 pm
history-of-sai-baba

இஸ்லாமியர் ஒருவர். “ ஹஜ்” புனித யாத்திரை சென்று வந்த பெரியவர். அவர் பெயர்  சித்திக்  ஃபால்கேசாய்பாபாவை  தரிசனம் செய்வதற்காக ஷீரடி வந்தார் . ஆவலுடன் சாய்பாபாவைக் காணச் சென்றார் . ஆனால் வரிசையில் நின்ற பக்தா்களுக்கு எல்லாம் தன்னைத் தரிசிக்க அனுமதி வழங்கிய சாய்பாபா சித்திக்கிற்கு மட்டும் மறத்து விட்டார்...'ஏன் இப்படி? என்னை மட்டும் சாய்பாபா ஏன் அனுமதிக்கவில்லை?' காரணம் புரியாமல் சித்திக் புலம்பினார் வருத்தம் அடைந்தார் . எப்படியாவது சாய்பாபாவின் தரிசனத்தை அடைந்தே ஆகவேண்டும் என்ற உறுதியுடன் ஷீரடியிலேயே காத்திருந்தார் .

துவாரகா மயியின் முன்னால் இருந்த மைதானத்திலேயே சாய்பாபாவின் தரிசனத்திற்காகப் பொறுமையாகக் காத்திருந்தார் சித்திக் .அவர் அவ்வாறு காத்திருந்தது எத்தனை நாட்கள் தெரியுமா ? மன்னிக்கவும் , நாட்கள் அல்ல ,மாதங்கள்! அதாவது ,ஒன்பது மாதங்கள்!ஆனாலும், சாய்பாபாவின் அனுமதி அவருக்குக் கிடைக்கவே இல்லை. இவர் மீது சாய்பாபாவின் சேவகர் ஒருவருக்கு இரக்கம் ஏற்பட்டது. "தாங்கள் இப்படிக் காத்திருப்பதால் பயனில்லை . சாய்பாபாவின் பக்தா் ஷாமாவைப் பார்த்து, அவரைத் தரிசிக்க ஏதாவது வழிவகை செய்யுமாறு கூறினால்தான் முடியும்" என்று யோசனை தெரிவித்தார்.

சித்திக்கிற்கும் இது சரி என்று தோன்றியது .ஷாமாவிடம் தனது நிலைமையைக் கூறி, உதவுமாறு கேட்டுக் கொண்டார். உடனே ஷாமாவும் சாய்பாபாவிடம் சென்று "எவ்வளவோ பக்தா்கள் தங்களைத் தரிசிக்க அனுமதிக்கும் போது, இந்த சித்திக்கை மட்டும் ஏன் இந்தளவிற்குச் சோதிக்கிறீர்கள் ? அவர் செய்த பாவம் தான் என்ன?" என்று கேட்டார் ."சித்திக்கை நான் எங்கே அனுமதிக்க மறுக்கிறேன்? “அல்லாஅல்லவா, அனுமதிக்க மறுக்கிறார். அதற்கு நான் என்ன செய்ய முடியும்"? என்று திருப்பிக் கேட்டார் சாய்பாபா .அப்புறம் சற்று நேரம் பொறுத்து," பார்விக் கிணறு அருகே இருக்கும் ஒற்றையடிப் பாதைக்கு சித்திக் வரவேண்டும். அப்படி வரும் போது நாற்பதாயிரம் ரூபாய் பணமும் எடுத்து வரவேண்டும்.

அப்படி வரமுடியுமா என்று கேட்டுச் சொல் " என்று ஷாமாவைப் பணித்தார் சாய்பாபா. சந்தோஷத்துடன் இதனை சித்திக்கிடம் ஓடிச்சென்று தெரிவித்தார் ஷாமா சிந்திக்கும் இது போன்ற ஒரு தருணத்திற்காகத் தானே இது நாள் வரைக் காத்தக் கொண்டிருந்தார் . விடுவாரா இந்தச் சந்தர்ப்பத்தை ? "நாற்பதாயிரம் என்ன, நாற்பது லட்சம் ரூபாய் கூட எடுத்துக் கொண்டு வருகிறேன். எனக்கு சாய்பாபாவின் தரிசனம் கிடைத்தால் போதும்" என்றார் .இதனை அப்படியே கிளிப்பிள்ளை சொல்கிற மாதிரி சாய்பாபாவிடம் ஒப்பித்தார் ஷாமா.உடனே சாய்பாபா "நாளை மசூதியில் ஆடு ஒன்றை வெட்டப்போகிறோம். அதில் எந்தப் பகுதி அவருக்கு வேண்டும் என்று கேள்" என்று கூறினார்.

இதையும் அட்சரம் பிசகாமல் அப்படியே சித்திக்கிடம் போய்ச் சொன்னார் ஷாமா.உடனே அவர், சாய்பாபா கையில் இருக்கும் மண்பாண்டத்தில் இருந்து ஒரேயொரு சிறிய துணுக்கு மாமிசம் எனக்குக் கிடைத்தால் கூடப்போதும் அதனை நான் பெற்ற பெரும் பாக்கியமாகக் கருதுவேன் " என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் சித்திக் .இதனை ஷாமா, சாய்பாபாவிடம் சொன்னதுதான் தாமதம், சாய்பாபாவிற்கு கோபம் கிளர்ந்தெழுந்தது . தன் கையில் இருந்த மண்பாண்டத்தைத் தூக்கி எறிந்தார் ஆவேசத்துடன் சித்தித் அருகே வேகமாக வந்தார் ." உனக்குள்ளே உன்னைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? பெருமை பீற்றிக் கொள்ளத்தக்க அளவிற்கு நீ அந்த அளவிற்கு உயர்ந்தவனா? “மெக்கா” போய்வந்த செருக்கில் இப்படி யெல்லாம் பேசுகிறாய் .

ஏதோ மிகப்பெரிய, முதிர்ந்த ஹாஜியாக உன்னை நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். “குரானில்இவ்வாறா கூறப்பட்டிருக்கிறது அந்தப் புனிதமான நூலைப் படித்து இப்படித்தான் புரிந்து கொண்டாயா?" என்று கோபத்தில் தடித்த வார்த்தைகளைக் கக்கினார் சாய்பாபா.வெலவெலத்துப் போனார் சித்திக் . தனது அகந்தையும் ,செருக்கும் தான் இது வரை சாய்பாபாவைத் தரிசிக்க விடாமல் தடுத்திருக்கிறது என்ற உண்மை இப்போது தான் அவருக்குப் புரிந்தது .பின்னர் சாய்பாபா அவரை ஆதரவாக அரவணைத்து மசூதிக்குள் அழைத்துச் சென்றார் . சித்திக்கிற்கு கூடை நிறைய மாம்பழங்களைக் கொடுத்து ,55 ரூபாயையும் கொடுத்து, அவரைத் தனது பக்தர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார்.

 

வி. ராமசுந்தரம்

ஆன்மீக எழுத்தாளர்

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close