அதித அன்பும், பாசமும் கொண்ட பக்தர் “மகல்சபதி

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2019 10:21 pm
history-of-saibaba

சாய்பாபாவின் முக்கிய பக்தர்களில் ஒருவரான “மகல்சபதி” ஷீரடி கோயில் பூசாரியாக இருந்தவர். சாய்பாபா, திருமண கோஷ்ஷயுடன் ஷீரடி திரும்பினார். அவர் தங்குவதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. அந்த ஊரிலிருந்து ஒரே கோயிலைப் பார்த்தார் சாய்பாபா. அந்தக் கோயில் அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அங்கேயே, தான் தங்க விரும்புவதாகத் தெரிவித்தார்.   இதனை, மகல் சபதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் சாய்பாபா ஒரு முஸ்லிம் என்றே அவர் நம்பினார். ஒரு முஸ்லிமை எப்படி இந்துக் கோயிலுக்குள் அனுமதிப்பது என்பதில் சபதிக்கு ரொம்பவும் தயக்கம் இருந்தது.

எனவே, அதற்குக் கண்டிப்பாக மறுத்துவிட்டார். சாய்பாபா மீது அபரிமிதிமான பாசமும், அன்பும் கொண்டவர்தான் மகல் சபதி.  ஆயினும் மதவேற்றுமை அவரை இப்படி மாற்றியிருந்தது.   ஆனாலும், சாய்பாபா தங்குவதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென்று சபதி விரும்பினார்.  ஊரின் ஓரமாக யாராலும் பயன்படுத்தாமல் பாழடைந்த நிலையில் இருக்கும் மசூதியில் சாய்பாபா தங்க அனுமதிக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.  இப்படித்தான் சாய்பாபா மசூதியில் தங்க ஆரம்பித்தார் .   மகல்சபதியின் வாழ்க்கையில் சாய்பாபா புரிந்த அற்புதங்கள் ஏராளம்.

இப்படி ஒரு நாள் இரவு, மகல்சபதியிடம் சாய்பாபா " எனது “நைகாய் பட்டேல்” என்பவனின் உயிரைக் குடிப்பதற்காக வெறி கொண்டு அவனைத் தாக்கி வருகிறது “ப்ளேக்” எனும் கொடிய நோய்.  அவனை அதன் பிடியில் இருந்து நான் காப்பாற்றிய ஆக வேண்டும். அல்லாவின் நாமஸ்ரணத்தின் மூலமாக இதனை நான் நிகழ்ந்தப் போகிறேன்.  ஆகவே, இரவு முழுவதும் நான் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட இருக்கிறேன்.  யாராவது என்னைத் தொந்தரவு செய்துவிடாமல் நீ மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் ,தூங்கிவிடக்கூடாது "என்றார் . துர்தஷ்டவசமாக  தவத்தில் இடையூறு ஏற்ப்பட்டதால், “நைகாய் பட்டேல்” இறந்துவிட்டார். சாய்பாபா மிகவும் வருத்தத்துடனும், கவலையுடனும் காணப்பட்டார் சாய்பாபா. ஷீரடி கிராமம் என்பதால் அங்கு பாம்புகள் அதிகம்.

 ஒரு நாள் இரவு மசூதியை விட்டு தனது வீட்டிற்குக் கிளம்பிய சபதியிடம் , பார்த்துப்போ வழியில் இரண்டு திருடர்கள் இருப்பார்கள்” என்று கூறி எச்சரிக்கை செய்திருக்கிறார் சாய்பாபா. அதேபோல, வழியல் இரண்டு பாம்புகளை எதிர்கொண்டிருக்கிறார் சபதி. இன்னொரு நாள் ," வீட்டிலிருந்து மசூதிக்குத் திரும்பி வரும் போது கையில் விளக்குடன் வா . வாசலில் திருடன் இருப்பான் " என்று எச்சரித்துள்ளார்   அதுபோல மசூதி வாசலில் பாம்பு ஒன்று இருந்திருக்கிறது. இவையெல்லாம் சாய்பாபாவின் அதீத சக்திகளை உணர்த்தும் சம்பவங்களாகும்.   இவ்வாறு தனக்கு உண்ணமையாக இருந்த பக்தர்களை அவர்களிடம் எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பக்தர்கள் வாழ்வில் அதிசயம் செய்த சாய்பாபா.
                        ஓம் ஸ்ரீ சாய் ராம்!!!

 

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close