உயிர் கொடுக்க மறுத்த சாய்பாபா

  Newstm Desk   | Last Modified : 24 Oct, 2019 07:14 pm
history-of-shirdi-saibaba

ஷீரடியில் ஒரு நாள் ஆட்டுக்குட்டி ஒன்று வெயிலின் தாக்கம் தாங்காமல் கீழே விழுந்து இறந்தே போனது. இதனைக் கவனித்த சாய்பாபா மெல்ல ஆட்டுக்குட்டியின் அருகே சென்றார்.  அங்கே கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் சாய்பாபா என்ன செய்யப் போகிறார் என்பதை ஆவலுடன் பார்த்தனர் .  ஆட்டுக்குட்டியின் இறந்த உடலை மெல்லத் தடவிக் கொடுத்தார் . சற்று நேரத்தில் இறந்த ஆடு உயிர் பெற்று .

இது அத்தனை பக்தர்களையும் ஆச்சர்யமடையச் செய்தது. அதே நேரத்தில் அங்கு ஒரு பெண்மணி  கதறி அழுது  கொண்டு ஓடிவந்தாள் .

சாய்பாபாவிடம் ,"சாய்பாபா என் மகனை நாகப்பாம்பு ஒன்று தீண்டிவிட்டது . அவனை எப்படியாவது காப்பாற்றி தீண்டிவிட்டது . அவனை எப்படியாவது காப்பாற்றி அருளுங்கள் என்று கேட்டார்  தங்கள்  உங்கள் கையால் விபூதி கொடுங்கள் சாய்பாபா அவனை காப்பாற்றுங்கள் "  என்று கண்ணீர்யோடு கூறுகிறனாள். 

ஆனால்,சாய்பாபாவோ அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. இரக்கமே இல்லாதவர் போல இறுக்கத்துடன் காணப்பட்டார். இது பக்தர்களுக்குச் சற்று படபடப்பைக் கொடுத்தது. விபூதி கொடுத்து அவளது மகனைக் காப்பாற்றுமாறு அவர்களும் கெஞ்சினர். ஆனாலும், சாய்பாபா சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. அவளது மகனும் விஷம் ஏறி மரணமடைந்து விட்டன் .

அப்போது  ஒரு தீட்சித் சாய்பாபாவிடம், " இந்தப் பெண்மணியின் கதறல்தாங்க முடியவில்லை. மனதைப் பெரிதும் காயப்படுத்துகிறது . எப்படியாவது அவள் மகனைக் காப்பாற்றி அருளுங்கள் சாய்பாபா” என்று கெஞ்சினார்.  அப்போது சாய்பாபா, ”காகா , இதில் நீ சம்பந்தப்படாதே  நடந்தது எல்லாமே நன்மைக்கே .அவள் மகன் இப்போது வேறொரு உடலுக்குள் பிரவேசித்து விட்டான் . அந்தத் தேகத்தில் இருந்துகொண்டு பல்வேறு அற்புதங்களை அவன் நிகழ்த்தப் போகிறான்.  நிறைய பேருக்கு நன்மைகளைச் செய்யப்போகிறான். அப்படிப்பட்ட அவள் மகன் இந்தப் பாம்பு கடித்த விஷம் ஏறிப்போன உடம்பால் செய்ய முடியாது . அதனை மீறி, அவனை இந்தத் தேகத்திற்குள் மறுபடியும் நான் இழுத்துக் கொண்டுவந்தால், அவன் புதிதாக எடுத்திருக்கும் அந்தத் தேகம் இறந்து போகும்.  இதுதேவையா என்பதை யோசித்துப் பார். உனக்காக நான் அவளது மகனை உயிர்ப்பிப்பது அவசியமா?".

சாய்பாபா அவளது மகனை எதற்காக உயிர் பிழைக்க வைக்கவில்லை என்பதன் பொருள் தீட்சித் உட்பட அனைவருக்குமே அப்போது தான் புரிந்தது.

சாய்பாபா வின் கருணையே கருணை!!!!  ஓம் ஸ்ரீ சாய்ராம்!!!

டாக்டர். வி. ராமசுந்தரம்

ஆன்மீக எழுத்தாளர்

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close