16 எளிய விநாயகர் ஸ்லோகங்கள்

  கோமதி   | Last Modified : 11 Sep, 2018 03:48 pm

விநாயகர் சகஸ்ரநாமம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

2. கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

3. ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

4. ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

5. மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே.

6. வக்ரதுண்டாய ஹீம் ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

7. அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

8. த்யானைக பிரக்டோ த்யேய: த்யாநோ த்யான பராயண:|| இதைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறை செல்வமும், ஆன்மீக, தியான நிலையில் உயர்வும் கிட்டும்.

9. விநாயகர் வழிபாட்டு ஸ்லோகம் தும்பி முகத் தோனே! துணையா வந்தெனக்குத் தம்பியின் புகழுதுவே தளர்வின்றிப் பாடிடவே நம்பியேன் பணிந்திட்டேன்! நலமாக அருள் தந்து வம்பெதும் வாராது வழியளித்துக் காத்திடுவாய் தினமும் காலையில் பூசையின் போதோ வழிபாட்டின் போதோ கீழ் கண்ட விநாயகர் துதி பாடல்கள் ஏதேனும் ஒன்றை பாடி வழிபடலாம்.

10. வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. -ஒளவையார்

11. பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா. -ஒளவையார்

12. ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. -திருமூலர்

13. விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்: விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து -11ஆம் திருமுறை

14. பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே. -சம்பந்தர்

15. திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர விண்மனி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம். -கச்சியப்பர்

16. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலால் கூப்புவர் தம்கை -11ஆம் திருமுறை

இந்த எளிய ஸ்லோகங்களை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும்.

- newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.