புத்திர் பலத்திற்கும் மனோ தைரியத்திற்கும் சொல்ல வேண்டிய சுலோகம்

  கோமதி   | Last Modified : 13 Feb, 2018 12:13 pmமஹாத்மன: அதாவது, மஹாத்மா என அவதார புருஷனான ராமரே தனது திருவாய் மொழியாலே போற்றிப் புகழப்பட்டவர் வாயு மைந்தன் ஹனுமன் . ராமசேவையிலே தன்னைக் கரைத்துக் கொண்ட ஹனுமன் தன்னை வணங்குபவருக்கு புத்திர் பலத்தையும், அளவிலா மனோ தைரியத்தையும் கொடுப்பவர்.

அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயனை வணங்கினால், அவன் நம்மை அனைத்து இடர்களில் இருந்தும் காப்பான்.  


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்  எம்மை அளித்துக் காப்பான்


பொருள்

ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன் ஐந்து பூதங்களில் ஒன்றான கடல் நீரைத் தாண்டி, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஸ்ரீ ராமனுக்காக ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை அயல் தேசமான லங்கையில் வைத்தான். அவன் எம்மை அனைத்தும் அளித்துக் காப்பான்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close