இன்னல்கள் நீங்கிட இன்றே வணங்குவோம் ஸ்ரீ நரசிம்மனை

  கோமதி   | Last Modified : 14 Feb, 2018 03:08 pm


இன்று திருவோண திரு நட்சத்திரம். ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த நட்சத்திரம். பாலகனாக இருந்தாலும், தன்னை இதய சுத்தியுடன் சரணடைந்த பிரகலாதனுக்காக, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்தவர் நரசிம்ஹர். பிரகலாதனைப் போல் உள்ளத் தூய்மையுடன் அவரை அழைத்தால் நமக்காகவும் அந்த நரசிம்ஹன் அருள் புரிவார். பார்ப்பதற்கு ருத்ர மூர்த்தியாக இருந்தாலும் தன் மக்களுக்கு என்றுமே அவர் கருணாமூர்த்தி தான். அவருடைய நட்சத்திர நாளில் அவர் தாள் பணிவோம்.


ஸ்லோகம்:

1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ: 

2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ: 

3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ: 

4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ: 

5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ: 

6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ: 

7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்: 

8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ: 


பொருள்:

1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை

2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே 

3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே 

4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே 

5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே 

6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே 

7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை. 

8. அதனால் நரசிம்மனே! உம்மை சரணடைகிறேன்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close