பலன்களை அள்ளித்தரும் - ஸ்ரீ விஷ்ணு ஸ்துதி

  கோமதி   | Last Modified : 21 Feb, 2018 01:53 pm


பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன் கிழமையின் சிறப்பை சொல்வதற்கு பயன்படுத்தப்படும் வாக்கியம் இது. ஆனால் புதன் கிழமைக்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. ஸ்ரீமன்நாராயணுக்கு உகந்த கிழமையாக புதன் போற்றப்படுகிறது.

குருக்ஷேத்ர போர்களத்தில் அம்புப் படுக்கையில் தனது இறுதி நாட்களில் இருந்த பீஷ்மர் தருமருக்கு அருளிய விஷ்ணு சகஸ்ரநாமத்தில்,‘தியான’ பகுதியில் வரும் ஸ்லோகத்தை இப் பதிவில் காணலாம். மிகவும் பலன் தரக்கூடிய இந்த தியான ஸ்லோகத்தை பக்தி சிரத்தையுடன் தியானித்தால் ஸ்ரீயின் நாயகனான எம்பெருமானின் அருளைப் பெறலாம்.


ஸ்ரீ விஷ்ணு ஸ்துதி

சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் ஸுரேசம்

விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்

லசஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ரு த்யான கம்ய

வந்தே விஷ்ணும் பவபயகரம் ஸர்வலோகைக நாதம


பொருள்: 

அமைதியான சொரூபம் கொண்டவர் திருமால். ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் அவருடைய நாபியில் தாமரை பூத்திருக்க… தேவர்களுக்கு  தலைவராகவும், உலகங்களுக்கு ஆதாரமாகவும், ஆகாயத்தைப் போன்று எங்கெங்கும் பரந்து இருப்பவருமாகத் திகழ்கிறார் அவர்.

மேகம் போன்று கருநீலம் கொண்டவரும், மங்கலத் திருமேனியரும், மகாலட்சுமியின் நாயகனும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவரும், யோகியரின் சிந்தையில் உறைபவரும், பிறப்பு- இறப்பு பற்றிய அச்சத்தை போக்குபவருமான ஸ்ரீமகாவிஷ்ணுவை வணங்குகிறேன்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.