காலையில் எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொல்லுங்கள் - ஒவ்வொரு நாளும் இனிய நாள் தான்

  கோமதி   | Last Modified : 07 Apr, 2018 10:15 am


தினமும் எழுந்தவுடன் நாம் செலவு செய்யப் போகும் ஒரு பத்து நிமிடம்,அன்றைய நாளை வெற்றி நாளாக மாற்ற உதவும்.காலையில் எழுந்ததும் சூட்சுமமாக இறைவன் குடியிருக்கும்  நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.


கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ

கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்.


கைவிரல் நுனியில் ஸ்ரீ லக்ஷ்மி தேவியும்,விரல்களின் அடிதளத்தில் ஸ்ரீ சரஸ்வதி, விரல்களின் நடு பாகத்தில் ஸ்ரீ கோவிந்தனும் இருப்பதாக ஐதீகம்.அதனால் அவர்களை வணங்கி ஒரு நாளை துவக்கினால்,அந்த நாள் இனிய நாளாக அமையும்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close