மலையென வரும் துன்பம் பனியென நீங்க வேண்டுமா – நீங்கள் சொல்ல வேண்டிய சுலோகம் இது தான்

  கோமதி   | Last Modified : 20 Apr, 2018 10:41 am


துன்பம் வரும் போது சோர்ந்து போவது மனித இயற்கை. ஆனால் அந்த சமயம் தான் நாம் இறைவனின் பாதத்தை உறுதியாக பற்றிக்கொள்ள வேண்டும். அபிராமி அந்தாதியில் கொடுக்கப்பட்டுள்ள இந்த அழகான தமிழ் துதியை தினமும் நாம் பாராயணம் செய்வதன் மூலம் மலையென வரும் துன்பம் பனியென நீங்கும். 

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்

கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,

மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்

துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.


பொருள்:


தாமரை மலரில் உறைகின்ற பிரமதேவனும், பிறைச்சந்திரனைச் சிரசில் தரித்த உன் பாதியாகிய சிவபிரானும், பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலும், வணங்கி எந்நாளும் துதித்து மகிழும் செம்மைமிக்க திருவடிகளையும் செந்தூரத் திலகமணிந்த திருமுகத்தையும் கொண்ட பேரழகுமிக்க அன்னையே! தயிர் கடையும் மத்தைப் போல, பிறவிக் கடலாம் சுழலில் சிக்கி அலையாமல், ஒப்பற்ற பேரின் நிலையை  நான் அடையும்படி திருவுள்ளம் கொண்டருள்வாயாக!


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close