ஒரு வில்வ இலை போதும் ஈசனை குளிர்விக்க – சோமவாரத்தில் லிங்காஷ்டகம் சொல்வோம்

  கோமதி   | Last Modified : 23 Apr, 2018 12:52 pmஇன்று மங்களம் நிறைந்த திங்கட்கிழமை.ஒரே ஒரு வில்வ இலை கொண்டு ஈசனை அர்ச்சித்தாலும்,மனம் குளிர்ந்து வரங்களை அள்ளித்தருவான் எம்பெருமான்.


லிங்காஷ்டகத்தின் தொடர்ச்சி இதோ ...


தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்

காம தஹன கருணாகர லிங்கம் 

ராவண தர்ப வினாஷன லிங்கம் 

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்


தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்


 காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்


 ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்


தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.


அடுத்த திங்கள் சி(ச)ந்திப்போம் .....


தென்னாட்டுடைய சிவனே போற்றி - எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close