இன்று நரசிம்ம ஜெயந்தி – பிரகலாதனின் வாக்கை மெய்ப்பிக்க வந்த கருணாமூர்த்திக்கு ஒரு தமிழ் துதி

  கோமதி   | Last Modified : 28 Apr, 2018 10:27 am


“என் விஷ்ணு தூணிலும் இருப்பார்,துரும்பிலும் இருப்பார்” என்ற பிரகலாதன் வாக்கை மெய்ப்பிக்க திருமால் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில், அதாவது பகலுமின்றி, இரவுமின்றி, அந்தி மாலைப்பொழுதில் நரசிம்மர் அவதரித்ததால், அந்த நேரமே நரசிம்மரை வணங்க ஏற்ற காலம். கருணாமூர்த்தி நரசிம்மரை போற்றி வணங்கிட ஒரு எளிமையான தமிழ் துதி இதோ :  

நாராயாண பக்தன் பிரகலாதனுக்கு தரிசனம் தந்து வரம் அருளியவரே! லட்சுமியின் நாயகனே! அசுரன் ஹிரன்யனை வதம் செய்தவரே! மிகப் பெரிய வீரரே! ஸ்ரீநரசிம்ம மூர்த்தியே! உம்மைத் துதிக்கின்றேன். கடன்களிலிருந்தும், சுமைகளிலிருந்தும் என்னை விடுவிப்பீராக! கோள் சஞ்சாரத்தால் துன்பங்களை அனுபவிக்கும் பக்தர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்கள் வருத்தம் துடைப்பவரே! நரசிம்ம மூர்த்தியே உமக்கு நமஸ்காரம்! 


நரசிம்மரிடன் நாம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும் என்பதால், நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்ற சொல் வழக்கு பொருத்தம் தானே.  


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.