வாழ்க்கையில் ஏற்றம் பெற ஒவ்வொரு ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும் (துலாம்,விருச்சிகம்,தனுசு)

  கோமதி   | Last Modified : 28 Apr, 2018 03:34 pm


ஜோதிடக்கலை பல நுட்பங்களைக் கொண்டது. ஒரு மனிதனின் குணம், வாழ்க்கை , வெற்றி, தோல்வி, உடல் நலன், மன நலன் என எல்லாவற்றையும் மிகத்துல்லியமாக அறிந்து கொள்ள பயன்படும் அற்புத கலை ஜோதிடம்.

உலகம் முழுவதுமே ஜோதிடம் கலை மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதில் மிகப் பழமையும் துல்லியமும் மிகுந்தது நம்முடைய ஜோதிடக்கலை. இது அடிப்படையில் கணக்குகளை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. நாள், கிழமை, நட்சத்திரம், லக்னம், திதியை என பல கூறுகளாக கணிக்கப்படுவதே ஜாதகம்.

ஒவ்வொரு ராசியினரும் அவருக்கு உரிய  தெய்வ  வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் சிரமங்கள் குறைந்து வாழ்க்கைக்கான சாதகமான அமசங்கள் மேம்படும். இந்த பதிவில் துலாம்,விருச்சிகம்,தனுசு ராசிக்காரர்கள் வழிபட தெய்வ துதிகள் தரப்பட்டுள்ளது. இதை கடைபிடித்து மேம்பட எல்லாம் பல இறைவன் துணை நிற்பார். 

அவரவருக்கு உரிய தெய்வங்களை உரிய துதிகள் சொல்லி வழிபட துயரங்கள் தொலைந்து வாழ்க்கை வசந்தமாகும்.


துலா ராசியினர் துயர் துடைக்கும் ஸ்ரீ ராகவேந்திரர்

 துலா ராசியினர் சொல்ல வேண்டியது ஸ்ரீ  ராகவேந்திரர்  துதி


நெஞ்சத்திலே என்றென்றும் நிலைக்கின்ற ஆலயம்

நாவினிக்கப் பாடி நின்றால் நலமளிக்கும் ஆலயம்

பஞ்சம்பசி துடைக்கின்ற பாராளும் ஆலயம்

பரந்தாமன் அருள்பெற்ற புண்ணியனின் ஆலயம்

கொஞ்சுதமிழ்ப் பாவினிலே கோபுரமாம் ஆலயம்

காவியுடை போர்த்திநின்ற கண்கொள்ளா ஆலயம்

வஞ்ச நெஞ்சம் உடையோரை மாற்றிடுமே ஆலயம்

மாந்தர்குறை தீர்க்கின்ற மகிமை மந்த்ராலயம் !

 

 விருச்சிக ராசியினருக்கு வழிகாட்டும் ஈசன்

 சொல்ல வேண்டிய  துதி சிவ துதி


நீருளான் தீயுளான் அந்தரத்துள்ளான்

நினைப்பவர் மனத்துள்ளான் நித்தமா ஏத்தும்

ஊருளான் எனதுரை தனதுரையாக

ஒற்றைவெள் ளேறு உகந்தேறிய வொருவன்

பாருளார் பாடலோ டாடல் அறாத

பண் முரன்றஞ்சிறை வண்டினம் பாடும்

ஏருளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்

இருக்கையாப் பேணியென் எழில்கொள்வதியல்பே !

செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்

செல்வ மதிதோய செல்வம் உயர்கின்ற

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய

செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே !

 

தனுசு ராசியினர் தடைகள் தீர துர்க்கை தேவியை வழிபட வேண்டும்

 சொல்ல வேண்டிய துதி துர்க்கை துதி


இசைதந்து இல்வாழ்வின் இடர்நீக்கிக் காப்பவளே,

விசையுடனே மணமாலை விருப்பமொடு அளிப்பவளே,

திசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே,

அசைவற்றபொருளதையும் ஆட்சிசெய்வாய் துர்க்கையளே !


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close