வாழ்க்கையில் ஏற்றம் பெற ஒவ்வொரு ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும் (மகரம்,கும்பம்,மீனம்)

  கோமதி   | Last Modified : 28 Apr, 2018 04:07 pm




ஜோதிடக்கலை பல நுட்பங்களைக் கொண்டது. ஒரு மனிதனின் குணம், வாழ்க்கை , வெற்றி, தோல்வி, உடல் நலன், மன நலன் என எல்லாவற்றையும் மிகத்துல்லியமாக அறிந்து கொள்ள பயன்படும் அற்புத கலை ஜோதிடம். 

உலகம் முழுவதுமே ஜோதிடம் கலை மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதில் மிகப் பழமையும் துல்லியமும் மிகுந்தது நம்முடைய ஜோதிடக்கலை. இது அடிப்படையில் கணக்குகளை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. நாள், கிழமை, நட்சத்திரம், லக்னம், திதியை என பல கூறுகளாக கணிக்கப்படுவதே ஜாதகம்.

ஒவ்வொரு ராசியினரும் அவருக்கு உரிய  தெய்வ  வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் சிரமங்கள் குறைந்து வாழ்க்கைக்கான சாதகமான அமசங்கள் மேம்படும். இந்த பதிவில் மகரம்,கும்பம்,மீனம் ராசிக்காரர்கள் வழிபட தெய்வ துதிகள் தரப்பட்டுள்ளது. இதை கடைபிடித்து மேம்பட எல்லாம் பல இறைவன் துணை நிற்பார். 


மகர ராசியினருக்கும் வழிகாட்டும் துர்க்கையம்மன்

வழிபட வேண்டிய  துதி துர்க்கை துதி


சேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன்

வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்

முத்துக்கொண்டைகண்டேன்முழுப் பச்சை மாலை கண்டேன்.

சவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன்

பின்னலழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன்

சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்

கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்

மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்

கைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக் கண்டேன்

அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா

வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா

தாயாரே உன்றன் தாளடியில் சரணம் என்றேன்

மாதாவே யுன்றன் மலரடியில் நான் பணிந்தேன் !

 

கும்ப ராசியினருக்கு வழிகாட்டும் சிவபெருமான்

வழிபட வேண்டிய  துதி சிவ துதி


ஈசனடி போற்றி யெந்தையடி போற்றி

தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி

சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும்மலை போற்றி !

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நிழலே !

 

மீன ராசியினருக்கு வளம் தரும் ஸ்ரீ ரங்கநாதப் பெருமான்.

சொல்ல வேண்டிய  துதி ஸ்ரீ ரங்கநாத துதி


பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா ! அமரரேறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,

பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு

பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே !

ஊரிலேன் காணியில்லை, உறவுமற் றொருவரில்லை

பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே ! ஓ கண்ணனே ! கதறுகின்றேன்

ஆருளர் களைக ணம்மா ! அரங்கமா நகருளானே !


நிறைவு பெற்றது ...


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close