திருமகளை நம் இல்லத்தில் நிலைக்க செய்ய - இதை சொன்னாலே போதும்

  கோமதி   | Last Modified : 23 Feb, 2018 10:23 amதிருமணங்களின் போது பெரியவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவார்கள். பதினாறு செல்வங்களை பெற்று நம் வாழ்க்கை வளமாக இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள். அந்த பதினாறு பேற்றினையும் எப்படி அடைவது?.அதற்கு அதிபதி திருமகள்.எனவே அவளை துதித்து சரணடைந்தாலே  பதினாறு சம்பத்துக்களும் நம்மை வந்துசேரும்.  தினமும் அலைமகளின்  ஷோடஸ ஸ்தோத்திரத்தை சொல்வதால் திருமகளை நம் இல்லத்தில் நிலைக்க செய்யலாம்.

மஹாலக்ஷ்மி எங்கெல்லாம் இருப்பாள்?. எங்கெல்லாம் சுத்தம்,தூய்மை இருக்கிறதோ,அங்கு தாயாரை காணலாம். எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவு, கூச்சல்,இல்லாமல் சந்தோஷம், நிம்மதி இருக்கிறதோ அங்கே அவள் சந்தோஷமாக வாசம் செய்வாள். மகாலட்சுமி , அஷ்ட லட்சுமி ஷோடஸ லட்சுமி என பலவாறு போற்றி வணங்கப்படுகிறாள். நம் வாழ்வை வளமாக்கும் பதினாறு குணநலன்களை அந்த ஷோடஸ மகாலட்சுமிகளின் 16 துதிகளை இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 


தனலட்சுமி 


யாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா 

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ 

அனைத்து உயிர்களிடத்திலும் நிறைந்திருக்கும் தனலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


வித்யாலட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் புத்தி ரூபமாகப் பொருந்தியிருக்கிறாளோ, அந்த வித்யாலட்சுமிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


தான்யலட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்த்திதா 

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ 

அனைத்து தானியங்களிலும் துலங்கி, உலகோர் பசிப்பிணி போக்கும் தான்யலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


வீரலட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு த்ருதிரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ 

அனைத்து உயிரினங்களிலும் தைரிய வடிவினளாய்த் திகழும் வீரலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


சௌபாக்ய லட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு துஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் மகிழ்ச்சி எனும் குணமாக நிறைந்திருக்கும் ஸௌபாக்கிய லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம். நமஸ்காரம்.ஸந்தான லட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிர்களிடத்திலும் தாய் குணமாகப் பொருந்தியிருக்கும் ஸந்தான லட்சுமியே நமஸ்காரம்,  நமஸ்காரம்,  நமஸ்காரம்.


காருண்யலட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் கருணை வடிவில் இலங்கும்  காருண்ய லட்சுமித் தாயே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


மகாலட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு லட்சுமிரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் செல்வ வடிவில் இணைந்திருக்கும் வைபவ லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.சக்திலட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிடத்தும் சக்தி வடிவில் பொருந்தியிருக்கும் சக்தி லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம். நமஸ்காரம்.


சாந்தி லட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் சாந்தி ரூபமாகத் திகழும் ஆதிலட்சுமி வடிவான சாந்தி லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


சாயா லட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு சாயாரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் பிரதி பிம்ப வடிவினளாகப் பொலியும் சாயா லட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


த்ருஷ்ணா லட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் ஆசை உருவில் விளங்கும் த்ருஷ்ணா லட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம். நமஸ்காரம்.


க்ஷமா லட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷமா ரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் பொறுமை குணமாகத் திகழும் கஜலட்சுமியின் வடிவான க்ஷமா லட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.கீர்த்தி லட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு கீர்த்திரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

எல்லா உயிரினங்களிலும் கீர்த்தி எனும் புகழ் வடிவினளாகத் திகழும் கீர்த்தி லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


விஜயலட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு விஜயரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

எல்லா உயிரினங்களிலும் வெற்றி வடிவில் விளங்கும் விஜயலட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


ஆரோக்கிய லட்சுமி


யாதேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய அம்சமாக உறையும் ஆரோக்கிய லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


நம் மனதில் உள்ள நல்ல, நேர்மையான எண்ணங்கள் ஈடேற ,இந்த ஸ்தோத்திரத்தில் நமக்கு என்ன தேவையோ அதை 108 முறை சொல்லி ,ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் கீழே விழுந்து நமஸ்கரித்தால், நாம் விரும்பியதை ,பதினாறு லட்சுமிகளும் கொடுத்து அருளுவார்கள்.


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.