முகங்கள் ஐந்து : கருணையோ கணக்கிலடங்காதது. கேட்டது கிடைக்க வேண்டுமா?

  கோமதி   | Last Modified : 03 Mar, 2018 06:02 pmபக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை மிக்கவர் ஆஞ்சநேயர்.  ஆஞ்சநேயர் பல வடிவங்கள் ரூபங்களில் பக்தர்களுக்கு அருள் வழங்கினாலும், பஞ்சமுக ஆஞ்சநேயர் அனைவருக்கும் மிகவும் இஷ்டமானவர். ஐந்து திசைகளை நோக்கியவாறு இருக்கும் அவரின் ஐந்து முகமும் பக்தர்களுக்கு கேட்டதை கேட்டவாறு கொடுத்தருளும்.

அனுமனின் ஐந்து முகங்களில் கருடமுகம் பிணி நீக்கும்,வராகமுகம் செல்வம் அளிக்கும்,அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும். ஐந்து முகங்களுக்கான ஸ்லோகங்கள்:


கிழக்கு முகம்-ஹனுமார்ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே

ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.

இந்த ஸ்லோகத்தை  பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெரும்.

 

மேற்கு முகம்-கருடர்ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய

ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்.

 

தெற்கு முகம்-நரஸிம்மர்

 


ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்.

 

வடக்கு முகம்- வராஹர்

 


ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய

ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்.

 

மேல்முகம்-ஹயக்ரீவர்

 

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய

ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.


பஞ்சமுக ஆஞ்சநேயர் தரிசனம் நமது பாவங்கள் நீக்கி நோய் நொடி இல்லாத ஆரோக்கிய நல் வாழ்வை தரும்.


ஶ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்.
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.