ஈசன் அருள் பெற இதை விட சிறந்த வழி இருக்க முடியுமா ?

  கோமதி   | Last Modified : 16 Apr, 2018 10:36 am


இன்று சோமவாரம். சிவனுக்கு உகந்த லிங்காஷ்டகம் அதன் பொருளுணர்ந்து சொன்னால் ஆனந்தம் தானே . ஈசன் அருள் பெற இதை விட சிறந்த வழி இருக்க முடியுமா ? 


ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் 

ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் 

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்


ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்


நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்


ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்


தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.


தொடர்ச்சி அடுத்த திங்கள் அன்று ....


ஓம் நம சிவாய .......


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close