இன்று அட்சயதிரிதியை, பல்லாண்டு வாழ சொல்லலாமா ... மகாலட்சுமியின் 12 நாமங்கள்

  கோமதி   | Last Modified : 18 Apr, 2018 03:38 pm


இன்று அட்சய திருதியை. இன்று துவங்கும் வேலைகள் அனைத்தும் பன்மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை. செல்வா செழிப்பு வேண்டும் என்றால் அதற்கு லட்சுமி தேவியின் அருள் வேண்டும். செல்வத்தின் அதிபதியான  குபேர லட்சுமியை, அட்சயதிரிதியை நாளில் வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 

இன்று மாலை வாசலில் மாக்கோலம் இட்டால் வீட்டில் திருமகள் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.பஞ்சலட்சுமி திரவியங்களான பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமி தேவிக்கு உகந்தவை. இந்த நன்னாளில் இவற்றைத் தானம் செய்வதால், லட்சுமியின் அருளால் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். 

இந்த நாளில் மகாலட்சுமியின் 12 திவ்ய நாமங்களை போற்றி துதித்தால், வீட்டில் மங்கலங்கள் நிறைந்து இருக்கும்.


ஸ்ரீதேவி: செல்வத்தை உடையவள்


பத்மா: தாமரையில் வாழ்பவள்


கமலா: தாமரையை வீற்றிருப்பவள் முகுந்த


மஹிஷீ: திருமாலின் மனைவி


லட்சுமி: லட்சணம் நிறைந்தவள்


திரிலோகேஸ்வரி: மூன்று உலகங்களையும் ஆள்பவள்


மகாகீர்த்தி: பெருமைக்குரியவள் ஷீ


ராப்திஸுதா: பாற்கடலில் பிறந்தவள்


விரிஞ்சஜனனி: உலகத்தைப் படைப்பவள்


வித்யா: அறிவைத் தருபவள்


ஸரோஜன்யாசனா: தாமரை ஆசனத்தில் இருப்பவள்


ஸர்வாபீஷ்ட பலப்ரதா: சகல விருப்பங்களையும் நிறைவேற்றுபவள்


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.