ஈசனிடம் நம் காரியங்களை சாதித்துக் கொள்ள இவர் தயவு அவசியம் - பிரதோஷ கால நந்தீஸ்வரர் ஸ்லோகம்

  கோமதி   | Last Modified : 27 Apr, 2018 12:42 pm


பிரதோஷ நாட்களில் ஈஸ்வரனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு நந்தீஸ்வரருக்கும் சிறப்பு செய்யப்படும்.இன்றைய காலக்கட்டத்தில்,சிபாரிசு இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை. அப்பன் ஈசனிடம் நம் காரியங்களை சாதித்துக் கொள்ள நந்தி பகவானின் அனுமதியும்,சிபாரிசும் தேவை. ஆகையினால் பிரதோஷ வேளைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நம் வாழ்வில் ஏற்றங்களை பெறலாம்.


சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி

சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி

கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி

கைலை யிலே நடம்புரியும் கனிந்த நந்தி

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி

பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி

நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி

நாள்தோறும் தண்ணீரில் குளி க்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி

சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி

மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி

மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி

அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி

வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி

வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி

பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி

வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி

வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி

கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி

கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி

வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி

விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி

வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி

வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி

சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி

செவி சாய்த்து அருள் கொடு க்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி

குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி

பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி

புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி


தென்னாடுடைய சிவனே போற்றி……

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி…….


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.