வாழ்க்கையில் ஏற்றம் பெற ஒவ்வொரு ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும். (மேஷம், ரிஷபம்,மிதுனம்)

  கோமதி   | Last Modified : 28 Apr, 2018 02:00 pm


ஜோதிடக்கலை பல நுட்பங்களைக் கொண்டது. ஒரு மனிதனின் குணம், வாழ்க்கை , வெற்றி, தோல்வி, உடல் நலன், மன நலன் என எல்லாவற்றையும் மிகத்துல்லியமாக அறிந்து கொள்ள பயன்படும் அற்புத கலை ஜோதிடம். உலகம் முழுவதுமே ஜோதிடம் கலை மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதில் மிகப் பழமையும் துல்லியமும் மிகுந்தது நம்முடைய ஜோதிடக்கலை. இது அடிப்படையில் கணக்குகளை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. நாள், கிழமை, நட்சத்திரம், லக்னம், திதியை என பல கூறுகளாக கணிக்கப்படுவதே ஜாதகம்.


ஒவ்வொரு ராசியினரும் அவருக்கு உரிய  தெய்வ  வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் சிரமங்கள் குறைந்து வாழ்க்கைக்கான சாதகமான அமசங்கள் மேம்படும். இந்த பதிவில் மேஷ,ரிஷப,மிதுன ராசிக்காரர்கள் வழிபட தெய்வ துதிகள் தரப்பட்டுள்ளது. இதை கடைபிடித்து மேம்பட எல்லாம் பல இறைவன் துணை நிற்பார்.

மேஷ ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் பிள்ளையார். 

சொல்ல வேண்டியது விநாயகர் துதி


ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியுள் வைத்தபடி போற்றுகின்றேனே.

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட

வித்தக விநாயக ! விரைகழல் சரணே !

 

ரிஷப ராசிக்காரர்கள் நிச்சயம் வழிபட வேண்டிய தெய்வம் முருகப் பெருமான்.

சொல்ல வேண்டிய துதி   முருகன்.


பேர் ஆதரிக்கும் அடியவர்தம்

பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்

பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்

பெருமான் என்னும் பேராளா!

சேரா நிருதர் குல கலகா!

சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்

தேவா ! தேவர் சிறைமீட்ட

செல்வா ! என்று உன் திருமுகத்தைப்

பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்

பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !

வா, வா, என்று உன்னைப் போற்றப்

பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்

வாராது இருக்க வழக்கு உண்டோ !

வடிவேல் முருகா ! வருகவே !

வளரும் களபக் குரும்பை முலை

வள்ளி கணவா ! வருகவே !

 

மிதுன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் பெருமாள் 

சொல்ல வேண்டியது பெருமாள் துதி


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று !

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்

சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்

திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

இரண்டுருவு மொன்றாய் இசைந்து !

அவரவருக்கு உரிய தெய்வங்களை உரிய துதிகள் சொல்லி வழிபட துயரங்கள் தொலைந்து வாழ்க்கை வசந்தமாகும்.


மற்ற ராசிக்காரர்களுக்கான துதிகள் அடுத்த பதிவில் ....


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.