வாழ்க்கையில் ஏற்றம் பெற ஒவ்வொரு ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும்.(கடகம், சிம்மம்,கன்னி )

  கோமதி   | Last Modified : 28 Apr, 2018 03:13 pmஜோதிடக்கலை பல நுட்பங்களைக் கொண்டது. ஒருமனிதனின் குணம், வாழ்க்கை , வெற்றி, தோல்வி, உடல் நலன், மன நலன் என எல்லாவற்றையும் மிகத்துல்லியமாக அறிந்து கொள்ள பயன்படும் அற்புத கலை ஜோதிடம். உலகம் முழுவதுமே ஜோதிடம் கலை மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதில் மிகப் பழமையும் துல்லியமும் மிகுந்தது நம்முடைய ஜோதிடக்கலை. இது அடிப்படையில் கணக்குகளை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. நாள், கிழமை, நட்சத்திரம், லக்னம், திதியை என பல கூறுகளாக கணிக்கப்படுவதே ஜாதகம்.

ஒவ்வொரு ராசியினரும் அவருக்கு உரிய  தெய்வ வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் சிரமங்கள் குறைந்து வாழ்க்கைக்கான சாதகமான அமசங்கள் மேம்படும். இந்த பதிவில் கடக,சிம்ம,கன்னி ராசிக்காரர்கள் வழிபட தெய்வ துதிகள் தரப்பட்டுள்ளது. இதை கடைபிடித்து மேம்பட எல்லாம் பல இறைவன் துணை நிற்பார். 

கடக ராசிக்காரர்கள்  கடைத்தேற வணங்க வேண்டிய தெய்வம் நரசிம்மர்.

சொல்ல வேண்டியது  நரசிம்மர் துதி


அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன்

அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன்

தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன்

துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்

மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன்

ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன்

வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன்

பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் !

 

சிம்ம ராசிக்காரர்கள் நிம்மதிக்கு வழிபட வேண்டிய தெயவம் ஆஞ்சநேயர்.

சொல்ல வேண்டியது அனுமன் துதி


விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்

உறைவார் முடிவே உணரா முதலோன்

கரைவார் நிறைவே கருதாதவன் போல்

உறைவான் மறையாய் ஒரு நீதியனே !

கண்டேன் ஒரு சீதையையே

கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்

வென்றேன் எனவே விழைந்தானையே நான்

கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே !

சரமே தொளையா சகமே மறவா

சரீரா அனுமா ஜமதக் கினிநீ

உரமே உறவே உறவோய் பெரியோய்

உயர்வே அருள்வாய் திருமாருதியே !

 

கன்னி ராசிக்காரர்கள் வழிபடவேண்டியது கோவிந்தன்.

சொல்ல வேண்டியது  கோவிந்தன் துதி

 

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,

தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,

நெடியானே ! வேங்கடவா ! நின்கோயி லின்வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !

 

அவரவருக்கு உரிய தெய்வங்களை உரிய துதிகள் சொல்லி வழிபட துயரங்கள் தொலைந்து வாழ்க்கை வசந்தமாகும்.

மற்ற ராசிக்காரர்களுக்கான துதிகள் அடுத்த பதிவில் ....


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.