தினம் ஒரு மந்திரம் - ஆயக் கலைகளை வரமாக தரும் அன்னை சாரதாம்பாள்

  கோமதி   | Last Modified : 23 May, 2018 12:21 pm


கல்விக்கு அதிபதி,வாக்குவன்மைக்கு தெய்வம்,கலைகளின் அரசி என்று போற்றப்படும் கலைமகளை துதிக்க ஒரு ஸ்லோகம். சிருங்கேரியில் கோலோச்சும் அன்னை சாரதாம்பாள் சரஸ்வதியின் ரூபமே. அவளை போற்றித் துதித்து ஆயக் கலைகளை வரமாகப் பெறுவோம். 

ச்ருங்காத்ரி மத்ய ப்ரவிராஜமாநாம்

பக்தேஷ்ட விஸ்ராணன கல்பவல்லீம்

துங்கா நதீதீர விஹார சக்தாம்

ஸ்ரீ சாரதாம்பாம் சிரஸா நமாமி.


சிருங்ககிரி க்ஷேத்திரத்தின் நடுவில் ப்ரகாசமாக இருந்து கொண்டு கற்பக மரம்/கொடி போல பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் தரும், தூங்கா நதியருகில் வசிப்பவளுமான ஸ்ரீ சாரதம்பாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கிடுகிறேன்.


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close