தினம் ஒரு மந்திரம் - தண்ணீர் பஞ்சம் தீர்க்க எளிமையான தமிழ் துதி

  கோமதி   | Last Modified : 30 May, 2018 11:41 am


நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப இந்த உலகமே நீரால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மாதம் மும்மாரி பொழிந்தது பொய்த்து, இப்போது வருடத்திற்கு ஒரு முறையே அரிதாகி வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில், நம்மை வாட்டி வதைக்கும் தண்ணீர் பஞ்சத்திற்கு நாம் அனைவரும் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது.


நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் 

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து 

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள 

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப 

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி 

வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் 

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். 


பொருள்: 

மூவடியால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமனுடைய சிறப்பை பாடியபடி பாவை நோன்பு நோற்போம். இவ்வாறு அவன் புகழ் பாடினால், உலகம் முழுதும் மும்மாரி மழை பெய்து தண்ணீர்ப் பஞ்சம் நீங்கும். நெல் செழித்தோங்கி வளரும். மீன்கள் வயல்வெளிகளில் துள்ளிக் குதிக்கும். குவளை மலர்களில் வண்டுகள் தேனருந்தி கிறங்கிக் கிடக்கும். பசுக்கள் பாலை நிரம்பத் தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த பாசுர பாராயண பலன் தரும். 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close