காதலொருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தே என்று வாழத்தான் அனைவரும் ஆசைப்படுகிறோம். ஆனால் சில தம்பதியர்கள் வாழ்வில் எப்போதும் டாம் அண்ட் ஜெர்ரி போல் எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருப்பார்கள். இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இத்துதியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் தம்பதியருள் ஒற்றுமை ஓங்கும், சந்தோஷங்கள் பெருகும்.
ராதேஸம் ராதிகாப்ராண வல்லபம் வல்லவீஸுதம்
ராதேஸேவித பாதாப்ஜம் ராதா வக்ஷஸ்தலஸ்திதம்
ராதானுகம் ராதிகேஷ்டம் ராதாபஹ்ருத மானஸம்
ராதாதாரம் பவாதாரம் ஸர்வாதாரம் நமாமிதம்
பொருள்:
ராதையின் உள்ளம் கவர்ந்தவனே, யசோதையின் புத்திரனும் ராதையினால் சேவிக்கப்பட்ட பாத கமலங்களை உடையவனே கிருஷ்ணா, நமஸ்காரம். ராதையின் இருதயத்தில் வசிப்பவனே, ராதை செல்லுமிடமெல்லாம் செல்பவனே, ராதையின் ப்ரிய நாயகனே, நமஸ்காரம். ராதையைக் காப்பவரே, அவதாரமாகப் பல ஜன்மங்களை எடுத்தவரே, யாவற்றையும் தாங்குகிறவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.