இல்லம் சுபிக்ஷமாக இருக்க... சொல்ல வேண்டிய மந்திரம்!

  கோமதி   | Last Modified : 04 Jun, 2018 10:32 am
today-s-mantram-tell-this-mantra-when-lighting-the-lamps

நம் இல்லம் என்றும் சகல சௌக்கியங்களுடன் சந்தோஷமாக இருப்பது நம் கையில்தான் உள்ளது. இறைவனைத் தொழுது, என்றும் அவனுடைய புழைப் போற்றி, அவன் வழியில் நடந்தாலே போதும் எந்த ஒரு கெட்டதும் நம்மை நெருங்காது. நம்முடைய இல்லம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று சுபிக்‌ஷமாக  இருக்க இந்த ஸ்லோகத்தை விளக்கேற்றும்போது சொன்னாலே போதும்...

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்

விளக்கினின் முன்னே வேதனை மாறும்

விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்

விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே

விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :

 

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி உள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close