துன்பம் போக்கி மகிழ்சியை தரும் அன்னை பராசக்தி துதி

  கோமதி   | Last Modified : 15 Jun, 2018 11:52 am
praise-parasakthi-for-happiness

வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கிட பெண்கள் இந்த பராசக்தி துதியை,  தினமும் பாடி வந்தால் துன்பம் படிப்படியாக விலகி இன்பம் நிறைந்திடும்.  தினமும் சொல்ல முடியாதவர்கள் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமாவது சொல்லலாம்.

அன்பே சிவமாய் அமர்வாள் நம்மை அன்னை பராசக்தி

ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் ஆதிபராசக்தி

இப்புவி இன்பம் வேண்டாம் என்பாள் அன்னை பராசக்தி

ஈடில்லா காட்சி அளிப்பாள் அன்னை பராசக்தி

உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை பராசக்தி

ஊக்கம் இருந்தால் போதும் என்பாள் அன்னை பராசக்தி

எங்கும் நிறைந்த ஜோதியாய் நிற்பாள் அன்னை பராசக்தி

ஏகாட்சரமாய் அவனியில் வந்தாள் ஆதிபராசக்தி

ஐங்கரநாதனை ஆதியில் தந்தால் அன்னை பராசக்தி

ஒட்டியான பீடத்தில் அமர்வாள் ஆதிபராசக்தி

ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி

ஒளவை எனவே அவனியில் வந்தாள் ஆதிபராசக்தி

ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி

ஓம் என்றாலே தேடியும் வருவாள் அன்னை பராசக்தி

ஓம் என்றாலே ஆடியும் வருவாள் அன்னை பராசக்தி

ஓம் என்றாலே பாடியும் வருவாள் ஆதிபராசக்தி

ஓம் என்றாலே உருவாய் வருவாள் அன்னை பராசக்தி

ஓம் என்றாலே குருவாய் வருவாள் ஆதிபராசக்தி

அன்னை பராசக்தி ஜெய ஆதி பராசக்தி

அன்னை ஆதிபராசக்தி ஜெய ஆதிபராசக்தி
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close