ராகு தோஷத்தால் மனவிரக்தி - தொடர் பிரச்னை நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

  கோமதி   | Last Modified : 16 Jun, 2018 04:19 pm

today-s-manthiram-emotional-and-continuous-problem-due-to-raku-doshas-this-is-the-slogan-you-have-to-say-everyday

ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்களுக்கு, திருமணத் தடை ,குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை போன்றவை ஏற்படும். மேலும் இத்தனை நாள் எடுத்த நற் பெயர் மறைந்து, பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படும் .தொழிலில்  எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி ,வேலையில் அடிக்கடி இடமாற்றம் ஏற்பட்டு  பிரச்னைகள் வரும். இது போன்ற சமயங்களில் மனம் தளராது அன்னை துர்கையை சரணடைந்து  இந்த மந்திரத்தை மனம் ஒன்றி தினமும் சொல்லிவந்தால், பலன் அதிகம்.

அரவெனும் இராகு ஐயனே போற்றி
கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள்புரி அனைத்திலும் வெற்றி
இராகுகனியே ரம்பா போற்றி.
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு
அமுதம் ஈயப் போகுமக் காலை
யுன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்

பாகுசேர் மொழியாள் பங்கன் பரன்னகியல்
மீண்டும் பெற்றஇராகுவே உனைத்துதிப்பென்
ரட்சிப்பாய் ரட்சிப்பாயே .
தண்மதி விழுங்கிய ராகுவே போற்றி
துன்மதி நினைப்பினை அறுப்பாய் போற்றி
என்மதி துலங்கிட முயல்வாய் போற்றி

Advertisement:
[X] Close