தினம் ஒரு மந்திரம் - சனி பகவான் கவசம்

  கோமதி   | Last Modified : 10 Jul, 2018 03:10 pm

today-s-mantram-shani-god-shield

சனி பகவானை தொழ அற்புதமான தமிழ் துதி. சனி பகவானின் அருளை பெற இந்த கவசத்தை சனிக்கிழமை தோறும் பாராயணம் செய்யலாம். சனியின் எந்த தாக்கம் இருந்தாலும், இந்த துதியை கூ றுவதால்,அவரை சாந்த படுத்த முடியும்.

கருநிற காகம் ஏறி

காசினி தன்னை காக்கும்

ஒரு பெரும் கிரகமான

ஒப்பற்ற சனியே உந்தன்

அருள் கேட்டுவணங்குகிறேன்

ஆதரித் தெம்மை காப்பாய்!

 

பொருளோடு பொன்னை அள்ளி

பூவுலகில் எமக்குத் தாராய்!

ஏழரை சனியாய் வந்தும்

வீட்டில் இடம் பிடித்தும்

கோளாறு நான்கில் தந்தும்

கொண்டதோர் கண்ட கத்தில்

ஏழினில் நின்ற போதும்

இன்னல்கள் தாரா வண்ணம்

ஞாலத்தில் எம்மைக் காக்க

நம்பியே தொழுகின்றேன் நான்!

 

பன்னிறு ராசி கட்கும்

பாரினில் நன்மை கிட்ட

எண்ணிய எண்ணம் எல்லாம்

ஈடேறி வழிகள் காட்ட

எண்ணையில் குளிக்கும் நல்ல

ஈசனே உனைத் துதித்தேன்!

புண்ணியம் எனக்கு தந்தே

புகழ்கூட்ட வேண்டும் நீயே!

 

கருப்பினில் ஆடை ஏற்றாய்!

காகத்தில் ஏறி நின்றாய்!

இரும்பினை உலோகமாக்கி

எள்தனில் பிரியம் வைத்தாய்!

அரும்பினில் நீல வண்ணம்

அணிவித்தால் மகிழ்ச்சி தருவாய்!

 

பெரும் பொருள் தரும் ஈசா

பேரருள் தருக நீயே

சனியெனும் கிழமை கொண்டாய்

சங்கடம் விலக வைப்பாய்

அணிதிகழ் அனுஷம், பூசம்

ஆன்றதோர் உத்ரட்டாதி

இனிதே உன் விண் மீனாகும்

எழில் நீலா மனைவியாவாள்

பணியாக உனக்கு ஆண்டு

பத்தொன்போதென்று சொல்வார்

குளிகனை மகனாய் பெற்றாய்

குறைகளை அகல வைப்பாய்

எழிலான சூரியன் உன்

இணையற்ற தந்தை யாவார்!

 

விழிபார்த்து பிடித்து கொள்வாய்!

விநாயகர் அனுமன் தன்னை

தொழுதாலோ விலகிச் செல்வாய்

துணையாகி அருளை தாராய்!

அன்னதானத்தின் மீது

அளவில்லா பிரியம் வைத்த

மன்னனே! சனியே ! உன்னை

மனதார போற்றுகின்றோம்

உன்னையே சரணடைந்தோம்!

 

உயர்வெல்லாம் எமக்குத் தந்தே

மன்னர் போல் வாழ்வதற்கே

மணியான வழிவகுப்பாய்

மந்தானம் காரி நீலா

மணியான மகர வாசா

தந்ததோர் கவசம் கேட்டே

சனியென்னும் எங்கள் ஈசா

வந்திடும் துயரம் நீக்கு

வாழ்வினை வசந்தம் ஆக்கு

எந்த நாள் வந்த போதும்

இனிய நாள் ஆக மாற்று!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.