நலம் தரும் நவக்கிரக கணபதி

  கோமதி   | Last Modified : 01 Aug, 2018 05:08 pm

navagraha-ganapathy

முழுமுதற் கடவுள் கணபதி நவகிரகங்களை தன்னுள் அடக்கி ஆள்பவர். பிள்ளையாரின் நெற்றியில் சூரியன் இருக்கிறது. தலை உச்சியில்  குரு, அடி வயிற்றில் சந்திரன், வலது மேற்கையில் சனிபகவான், வலது கீழ்க்கையில் புதன், இடது மேற்கையில் ராகு, இடது கீழ்க்கையில் சுக்கிரன்  இப்படி நவக்கிரகங்களும் பிள்ளையாரிடம் இருக்கின்றன. 

 

கணபதியே நவகிரக வடிவில் உள்ளார் என்பதை உணர்ந்து  அதற்குரிய துதிகளைச்சொல்லி வணங்கினால் இடையூறுகள்  நிச்சயம் விலகும். நவகிரகத்துக்கு உகந்த கணபதி துதியைச் சொல்லி வணங்கினால் துயரங்கள் நீங்கி  நலம் பல பெறலாம்.

 

ஞாயிறு – சூரியரூப வக்ரதுண்ட கணபதயே நம

திங்கள் – சந்த்ரஸ்வரூப பாலசந்த்ர கணபதயே நம

செவ்வாய் – அங்காரக ஸ்வரூப சங்கடஹர கணபதயே நம

புதன்  – புதஸ்வரூப நவனீத ஸ்தேவ கணபதயே நம

வியாழன்  – குருஸ்வரூப ஸந்தான கணபதயே நம

வெள்ளி – சுக்ரஸ்வரூப க்ஷிப்ர ப்ரஸாத கணபதயே நம

சனி  – சனீஸ்வரூப அபயப்ரத கணபதயே நம

ராகு – ராஹுஸ்வரூப துர்க்கா கணபதயே நம

கேது – கேதுஸ்வரூப ஞான கணபதயே நம

 
இதைத் தவிர தொடர்ந்து நாம் அனுதினமும் சொல்ல வேண்டிய   மந்திரம். 

நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ ஸ்வரூபகம் கணபதயே நம.

 

தும்பிக்கையில் ஸ்வர்ண கலசம் ஏந்தி பக்தர்களின் நவகிரக தோஷங்களை நீக்குகிறார் விநாயகர். முறம் போன்ற காதுகளை அசைத்து பக்தர்களின் துன்பங்களை விரட்டுகிறார் இதுவே கணேச  புராணத்தின் வக்ர  துண்ட கணபதி துதியின் பொருள்.

 

கணபதியை வாய் நிறைய நல்ல மந்திரங்களை   சதுர்த்தி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வணங்கிட வாழ்க்கை வளம் பெரும். 
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.