இன்றைய காலக்கட்டத்தில் பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு அவர்களை காப்பற்றி கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு அதிகம் உள்ளது. வேலை,மற்றும் படிப்பு காரணமாக வெளியில் செல்லும் பெண்களோ,அல்லது தீயவர் தொல்லைக்கு ஆளாக கூடியவர்களோ இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை தினமும் குறைந்தது தினமும் 21 முறை ஓதி வர,நமக்கு கவசமாக, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான் கருணாமூர்த்தி.
"நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியவே