தினம் ஒரு மந்திரம் - அனுமனின் கருணைக்கு பாத்திரமாக சொல்ல வேண்டிய மந்திரம்

  கோமதி   | Last Modified : 14 Aug, 2018 11:39 am

mantra-of-the-day-a-mantra-that-tells-hanuman-s-mercy

இறை பக்திக்கும், சேவைக்கும் இலக்கணமான அனுமனை தியானித்தாலே,ஸ்ரீ ராமரின் அருளுக்கு நாம் பாத்திரமாக முடியும். தினமும் இந்த அனுமன் ஸ்லோகத்தை சொல்லி வருவதன் மூலம் புத்தி, மனோதைரியம்,நல்வாழ்வு பெறலாம்.

அயோத்யாநகர ரம்யே ரத்ன ஸௌந்தர்ய மண்டபே

மந்தாரபுஷ்பைராபத்த விதாநே தோரணாங்கிதே

ஸிம்ஹாஸந ஸமாரூடம் புஷ்பகோபரி ராகவம்

ரக்ஷோபிர் ஹரிபிர் தேவைர்திவ்ய யாநகதை:ஸுபை:

ஸம்ஸ்தூயமாநம் முநிபி: ஸர்வத: பரிஸேவிதம்

ஸீதாலங்க்ருத வாமாங்கம் லக்ஷ்மணேநோபஸோபிதம்

ஸ்யாமம் ப்ரஸந்நவதநம் ஸர்வாபரண பூஷிதம்

பொருள்: 

அயோத்தி நகரத்தில் ரம்யமான ரத்ன ஸௌந்தர்ய மண்டபத்தில் மந்தாரம்போன்ற பலவிதமான புஷ்பங்களால் ஆக்கப்பட்ட தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விதானத்தின் கீழ் சிம்மாசனத்தில் சீதா, பரத, லக்ஷ்மண, சத்ருக்னனோடு மேகவண்ணத்துடன் புன்முறுவல் பூத்த முகத்துடன் சர்வாலங்காரத்துடன் காட்சி தரும் ராமபிரானை வணங்குகிறேன்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close