ஞாபக மறதியால் அவதிப்படுபவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

  கோமதி   | Last Modified : 24 Aug, 2018 07:26 pm

today-s-mantra-those-who-suffer-from-memory-loss-can-chant-this-mantra

ஆய கலைகளுக்கு அன்னையானவள் கலைமகள். ஞாபக மறதி நீங்கி, நினைவாற்றல் பெருக அன்னை கலைவாணியை இந்த துதியால் தினமும் வணங்க, அவள் அருளாள் படித்த கலைகள் மனதில் பதியும். 

அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம்ரேடனஜபா

ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா

யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ

ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவபுஷா

பொருள்:

அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடாமல் உனது கணவனாகிய சிவபெருமானின் பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.