தினம் ஒரு மந்திரம் - விஷக் காய்ச்சல் மற்றும் விஷ ஜந்துகளால் ஏற்படும் உபாதைகள் நீங்க

  கோமதி   | Last Modified : 27 Aug, 2018 10:52 am

today-s-mantra-a-mantra-which-will-cure-you-from-poisonous-fever-and-poisonous-creatures

உடல் நலிவுற்றோர் மற்றும் விஷ உபாதையால் அவதியுறுவோர் பஞ்சமி திதிநாளில், இந்தத் துதியை, அம்பிகையின் முன் 16 முறை ஜபித்து விபூதி இட்டுக் கொண்டால் பாதிப்புகள் விலகும். 

கிரந்தீ மங்கேப்ய: கிரணநிகுரும்பாம்ருதரஸம்

ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகரசிலாமூர்த்தி மிவ ய:

ஸ: ஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ

ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யா: ஸுகயதி ஸுதாதார ஸிரயா 

பொருள்: 

என் ஐம்புலன்களாலும் பக்தி ரசத்தைப் பெருக்கும் வகையில் உன்னை வணங்குகிறேன். சந்திரகாந்தச் சிலை வடிவினளாக உன்னை உருவகித்து தியானிக்கிறேன். எனக்கு, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களை அடக்கும் கருடன் போன்ற ஆற்றலினை அருள்வாயாக. அம்மா, உன் பார்வை, விஷ ஜந்துகளால் ஏற்படும் உபாதைகளையும், விஷக் காய்ச்சலையும் அறவே ஒழிக்கிறது. பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷம் தன்னைத் தாக்கக்கூடாது என்பதற்காக மஹாவிஷ்ணுவே அம்ருதேஸ்வரியான அம்பிகையை தியானித்திருக்கிறார் என்றால், உன் அருள்தான் எத்தகைய நன்மை விளைவிக்கக் கூடியது! 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.