விநாயக சதுர்த்தி - கணபதியை போற்றி துதித்திட சில எளிமையான தமிழ் துதிகள்

  கோமதி   | Last Modified : 11 Sep, 2018 02:56 pm
vinayaka-chathurthi-some-simple-tamil-tunes-to-praise-ganapati

1.“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் தா.’

 

2.“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான்

விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்

தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.’

 

3.“வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்துவரும்

வெற்றிமிகுத்து வேழவனைத் தொழ புத்தி மிகுத்துவரும்

வெள்ளிக்கொம்பின் விநாயகனைத் தொழ

துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே.’

 

4.“திருவாக்கும் செய்கருமம் கைகூடட்டும்

செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானை

காதலால் கூப்புவார்தம் கை.’

 

5.வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்

மாமலராள் நோக்குண்டாம் மேனிநுடங்காது

பூக்கொண்டு துப்பார் திருமேனி

தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கே.’

 

6.“அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம் போம்

நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்து மேவும்

கணபதியை கைத்தொழுக் கால்.’

 

7.“திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்

கருணை பூக்கவும் தீமையைச் சாய்க்கவும்

பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்

பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.’

 

8.“மண்ணுலகத்தினிற் பிறவி மாசற

எண்ணிற் பொருளெல்லாம் எளிதில் முற்றுற

கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்

பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.’

 

9.“கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபல கற்பகம் எனவினை கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரண்மகன் மற்பொரு திரள்புய மதயானை

மத்தள வயிற்றனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேளே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா

அத்துயரது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இயமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் பெருமாளே.’

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close