• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

தினம் ஒரு மந்திரம் – குரு பெயர்ச்சி அன்று குருவைப் போற்றித் துதிப்போம்

  கோமதி   | Last Modified : 04 Oct, 2018 11:31 am

a-mantra-of-the-day-let-us-glorify-the-guru-at-this-guru-peyarchi

இன்று (04.10.2018) குரு பெயர்ச்சி. குரு பவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதையே குரு பெயர்ச்சி எனப்படுகிறது. குரு பகவான் அப்படி ஒரு ராசிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் மற்ற ராசிகளை பார்ப்பதால் ஏற்படும் பலன்களே குரு பெயர்ச்சி பலன்கள். பலன்கள் எதுவாக இருந்தாலும்,இந்த அழகான தமிழ் துதிக் கொண்டு அவரைப் போற்றிட அவரருள் கிட்டும்.

வானவர்க் கரசே! வளம் தரும் குருவே! 

காணா இன்பம் காண வைப்பவனே! 

பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்! 

உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!

கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்! 

தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்! 

நிலையாய் தந்திட நேரினில் வருக!' 

நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்! 

இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்! 

உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்! 

செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!

வல்லவன் குருவே! 

வணங்கினோம் அருள்வாய்! 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close