கோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்

  கோமதி   | Last Modified : 18 Oct, 2018 03:52 pm
grand-navarathiri-begins-navarathiri-nineth-day-worship

அம்பாள் : ஸ்ரீபிராஹ்மி 

உருவ அமைப்பு : அன்ன வாகனம், கையில் ஏடு, ஜெபமாலை, கமண்டலம் கொண்டவள். நான்கு முகம் உடையவள்.

குணம் : சௌம்யம்

சிறப்பு : ஸ்ரீபிரும்மாவின் அம்சம்

நைவேத்யம் : சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பால் பாயாசம்

பூஜை செய்ய உகந்த நேரம்  : காலை 9 - 10.30, மாலை 6 – 7.30

மலர் : மல்லிகை, செம்பருத்தி, கேந்தி

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் :11

பாட வேண்டிய ராகம்  : கானடா, குறிஞ்சி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் : ரோகினி, ஹஸ்தம், திருவோணம்

திசை புத்தி நடப்பவர்கள் : சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள் : லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்

விசேஷம்  :  வித்யாதாரிணி -  கல்வி, வித்தைகளுக்கு அதிபதி

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 1 உடையவர்கள்

சொல்ல வேண்டிய பாடல்:

[1]    தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா

மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா

இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே

கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.  

[2] மூல மந்திரம்:  ஓம் - சிம் - பிராஹ்மயே - நம :

[3] காயத்ரி:  ஓம் தேவி பிராம்யை வித்மஹே மஹா சக்த்யைச தீமஹி தந்தோ தேவி பிரசோதயாத்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close