கண்டா சூல ஹலாஸி சங்கமுஸலே சக்ரம் தனு: ஸாயகம்
ஹஸ்தாப்ஜைர் தததீம் கனந்த விலஸத் சீதாம்சு துல்யப்ரபாம்
கௌரீதேஹ ஸமுத்பவாம் த்ரிஜகதா மாதாரபூதாம் மஹா
பூர்வா மந்த்ர ஸரஸ்வதீ மனுபஜே சும்பாதி தைத்யமர்த்தினீம்
பொருள்:
மணி, சூலம், கலப்பை, சங்கம், உலக்கை, சக்கரம், வில், அம்பு ஆகியவற்றைத் தன் கரங்களில் தரித்தவளே, நிலவுபோலப் பிரகா சிப்பவளே, சரஸ்வதி தேவியே நமஸ்காரம். சும்பன் முதலான அசுரர்களை அழித்தவளே, என் அறியாமையும் அழித்து அறிவுச் சுடர் ஏற்றி வாழ்வருள் வாயே!