சுப்ரமண்யபுஜங்கம்(23)
ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா
ஹதஸ்தாரக: ஸிம்ஹவக்த்ரஸ்ச தைத்ய:
மமாந்தர்ஹ்ருதிஸ்தம் மனக்லேசமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி
பொருள்:
முருகப்பெருமானே, ஆயிரம் பிரமாண்டங்களை ஆண்ட சூரபத்மன், தாரகன், ஸிம்ஹவக்த்ரன் என்ற அசுரர்களை எளிதாக வதம் செய்த பெருமானே நமஸ்காரம். அவர்களை சம்ஹாரம் செய்தது போல் என் மனதில் உள்ள கவலைகள் யாவற்றையும் அழித்து எனக்கு சந்தோஷம் அருள வேண்டும்