விடியலில் ஒரு திருப்பாவை – 1

  கோமதி   | Last Modified : 15 Dec, 2018 10:33 pm

a-thiruppavai-at-dawn

கோதை நாச்சியார் அருளிய இந்த திருப்பாவை மந்திரத்தை மார்கழி மாதம் 30 நாளும் அதிகாலை துயில் எழுந்து,உடல் மற்றும் மனதை சுத்தி செய்துக் கொண்டு மாலவனை நினைத்து சொல்லிட வேண்டும். இதனால் கன்னிப் பெண்களுக்கு அவர்கள் மனம் நிறைந்த மணாளன் கிடைப்பான் என்பது நம்பிக்கை. திருமணமானப் பெண்கள் தங்கள் கணவரோடு மனம் ஒன்றிய வாழ்க்கை வாழ்வர். ஆதலால் நாமும் மார்கழி முப்பது நாளும் இந்த திருப்பாவை பாசுரங்களை பாடி கண்ணன் அருள் பெறுவோம். 

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

முழு நிலவு நிறைந்த மார்கழி மாதத்தில் செல்வ  வளம் நிறைந்த ஆயர்பாடியின் அழகிய சிறுமிகளே ! அழகிய அணிகலன்களை அணிந்த அணங்குகளே ! எழுந்திருங்கள். இன்று முதல் நாம்  அதிகாலையில் நீராடப் புறப்படுவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதா பிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தையுடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி ஆயர்பாடியில் வசிக்கும் தன்தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் கோதை நாச்சியார் .

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.