காரடையான் நோன்பு சொல்ல வேண்டிய ஸ்லோகம்..

  டேவிட்   | Last Modified : 15 Mar, 2019 09:51 am
kaaradaiyaan-fasting-slogam

தீர்க்க சுமங்கலியாக இருக்க காரடையான் நோன்பு விரதம் இருக்கும் பெண்கள் இன்று காமாட்சி அம்மனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது..

சந்த்ராசந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா பாங்கலீலாம்
குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூத ப்ருங்காம்
மாராராதே: மதனஸிகினம் மாக்ஸளம் தீபயந்தீம்
காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லி முபாஸே..

விளக்கம்: 

சந்திரனை தலையின் ஆபரணமாக அணிந்துகொண்டிருப்பவளே.. அழகிய திருமுகம் கொண்டவளே… சஞ்சலமிக்கவர்களின் மனவேதனையைப் போக்குபவளே. குந்த புஷ்பம் போன்ற அழகை கொண்டிருப்பவளே… ஸ்தன பாரத்தினால் வணங்கிய சரீரத்தை உடையவளே.. மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளே..காமாட்சி தாயே…உன்னை வணங்குகிறேன்.

பூஜை முடித்து  நோன்பு கயிறு கழுத்தில் கட்டும் போது உருகாத வெண்ணெயும், ஓரடையும் வைத்து நான் நோன்பு இருந்தேன். ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும் என்று வேண்டி கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

தோரம் க்ரஹணாமி ஸூபகே
ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
சுப்ரீதா பவ ஸர்வதா:

என்ற ஸ்லோகத்தை சொல்லி கட்டிக்கொள்ள வேண்டும்.

விளக்கம்:
என்னுடைய கணவர் நீண்ட காலம் நோய்நொடியில்லாமல் வாழ்வதற்காக,  இந்த நோன்பு விரத்ததை மேற்கொள்கிறேன். காமாட்சி அன்னையே, உன் அருளால் மஞள்  சரடும் அணிந்துகொண்டேன். என் கண வரைக் காத்தருளும் தெய்வம் நீயம்மா…. என்றும் காத்தருள்வாய் அன்னையே !

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close