ஆண்டு முழுவதும் செல்வங்கள் செழிக்க இன்று இவரை தரிசித்தால் போதும்

  கோமதி   | Last Modified : 18 Mar, 2018 08:03 am


வசந்தத்தை உகாதி திருநாளுடன் வரவேற்போம் 

சித்திரை திருநாள்தான்  நமது பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு. தெலுங்கு கன்னடம் பேசும் மக்களுக்கு வருட பிறப்பு நாளே உகாதி திருநாள்.  பிரம்ம புராணத்தின் படி சைத்ர மாதத்தின் முதல் நாள் பிரம்மன்  இந்த உலகத்தை படைத்தார். உலகமே உதயமான நன்னாளில் புது செயல்களை துவங்குவது காலங்காலமாக நம்முடைய வழக்கம். சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பையும்  சேர்த்து குறிப்பதால், உகாதி திருநாள் மேலும் சிறப்பு பெறுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

 தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களின் புத்தாண்டு திருநாளான உகாதி அன்று , அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்கிறார்கள்.ஆந்திரம் , கர்நாடகம் முழுக்க கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் ,விசேஷ ஆராதனைகள் நடைபெறுகிறது.

 உகாதி நாளின் தனிச்சிறப்பு உகாதி பச்சடி


வாழ்க்கை பல சுவைகள் நிறைந்தது. வெறும் இனிப்பாகவோ , கசப்பாகவோ, துவர்ப்பாகவோ வாழ்க்கை  நின்றுவிடுவதில்லை. இயற்கையில் கூட வசந்த காலம் என்று இருந்தால் இலையுதிர்காலமும் காலத்தின் கட்டாயம் தானே.

உகாதியின் முக்கிய நிகழ்வு - அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி. இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் உகாதி பச்சடியை  கன்னட மொழியில் பேவு பெல்லா என்கின்றனர்.

உகாதி பண்டிகையன்று கீழ்காணும்  ஸ்லோகத்தை சொல்லிய பிறகுஉகாதி பச்சடியை உட்கொள்ள வேண்டும். இப்படி செய்வதினால் , ஆண், பெண் இருவருக்குமே  வைரம் போன்ற உடலும், அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறும்  என்பது நம்பிக்கை.


 உகாதி ஸ்லோகம்

 

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச |

சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம் ||

 

உகாதி பண்டிகையில்  திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.


உகாதி அன்று திருமலா திருப்பதியில் உற்சவ மூர்த்திகளை தங்கவாசல் வரை கொண்டு வந்து பஞ்சாங்கம் படிப்பது மரபு. மலர் மாலைகளால் வெகு விமர்சையாக அலங்கரிக்கப்பட்ட திருமலையில் உகாதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆண்டு முழுவதும் செல்வங்கள் செழிக்கும்.

தெலுங்கு , கன்னடம் பேசும் மக்களுக்கு newstm தனது உகாதி நல்வாழ்த்துக்களை  உரித்தாக்குகிறது.


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close