சரஸ்வதி சமேதராக பிரம்மன் அருள்பாலிக்கும் திரிமூர்த்தி தலம்

  கோமதி   | Last Modified : 10 Jul, 2018 04:07 pm
trimurthi-thalam-is-blessed-with-brahmaa-as-saraswati-samedar

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது திருக்கண்டியூர். இங்கே உள்ள பெருமாள் ஹரசாப விமோசன பெருமாள். அம்பாள் : ஸ்ரீ கமலவல்லி தாயார். பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது வைணவர்களின் 15ஆவது திவ்ய தேசமம் என்கிறது ஸ்தல புராணம். 

இத்தலத்தைப் பற்றி பிரமாண்ட புராணத்தில் எட்டு அத்தியாயங்களிலும், திருமங்கையாழ்வார் பாசுரத்திலும்,  திருமுறைகளிலும் பிள்ளை பெருமாள் அய்யங்கார் அந்தாயிலும் காணக்  கிடைக்கிறது.  சிவனின் (ஹரன்) சாபம் தீர்த்ததால், இங்குள்ள பெருமாள் “ஹரசாப விமோசனப் பெருமாள்” என்று  அழைக்கப்படுகிறார்.

இந்தக் கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகின்றன. இதே ஊரில் சிவபெருமானும்  குடிகொண்டாதால் “கண்டீஸ்வரர்” எனப் பெயர் பெற்றது. கண்டீஸ்வரம் என்றாகி, கண்டியூர் என மருவியதாம்!  இது மும்மூர்த்தி தலம்.  பிரம்மனுக்கு கோயில் கிடையாது என்பதால், கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதராக பிரம்மன் அருள்பாலிக்கிறார்.   

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திக்கும் தனித்தனியே ஆலயம் அமைந்த ஒரே ஊர் திருக்கண்டியூர். எனவே இத்திருத்தலம் திரிமூர்த்தி  தலம் என்று அழைக்கப்படுகிறது.  திருத்தலத்திற்கு கமலாரண்யம், கண்டனஷேத்திரம், திரிமூர்த்தி ஷேத்திரம் என்ற பெயர்கள் உள்ளது.  தாமரை தடாகங்கள் நிறைந்து காணப்பட்டதால் கமலாரண்யம் என்றும் மும்மூர்த்திகளுக்கும் ஆலயம் அமைந்து  உள்ளதால் திருமூர்த்தி ஷேத்திரம் என்றும், தலத்தை நினைத்தவுடனேயே செய்த பாபங்கள் அனைத்தும் கழிவதால் கண்டன ஷேத்திரம் என்றும் பெயர் ஏற்பட்டது.

திருக்கண்டியூர் வந்து பெருமாளை ஸேவித்தால், நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்! 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close