ஜாதகத்தில் எந்த திசை நடந்தால், எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

  கோமதி   | Last Modified : 19 Jul, 2018 04:59 pm
if-there-is-any-diversion-in-your-horoscope-do-you-know-which-god-you-worship

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஜாதகத்தின் மீது பெரும் நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் சில விரும்பத்தகாத செயல்கள் நடக்கும் போதும், நமது நேரம் என்னவோ சிரமமாக இருக்கிறதே என்ற எண்ணம் தோன்றும் போது  நம் ஜாதகத்தை கையில் எடுக்கிறோம்.நமக்கு நடக்கும் திசைகளுக்கு ஏற்ப ஜோதிட வல்லுனர்கள் நமக்கு சில பரிகாரங்களை சொல்லுவார்கள். ஆனால் யாருக்கு என்ன திசை நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகம்.

இதோ தசாபுத்தி எனப்படும் நம்முடைய திசைகளுக்கு ஏற்ற வழிபாட்டு தெய்வங்கள் 

சூரிய திசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு பலன்  தரும்.

ஜாதகத்தில் சந்திர திசை நடப்பவர்கள் அம்பிகையை வழிபட நன்மை தரும்.

செவ்வாய் திசை நடப்பவர்க ளுக்கு முருகன் வழிபாடு கை கொடுக்கும். புதன் திசை நடப்பவர்கள் விஷ்ணுவுக்கு  வழிபாடு செய்ய,விருப்பங்கள் நிறைவேறும்.

வியாழ திசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்தி தரும்.

சுக்ர திசை நடப்பவர்களுக்கு சக்தி, அபி ராமி வழிபாடுகள் நல்ல பலன்களை தரும்.

சனி திசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு துணை நிற்கும்.

ராகு திசை நடப்பவர்கள் துர்க்கை யை சரண் அடையலாம்.

கேது திசை நடப்பவர்கள் விநாயகரை வழிபடுவது நல்லது.

அந்தந்த தெய்வங்களின் படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அந்த தெய்வங்களின் திருக்கோயில் சென்று வருவதும் ( கேது திசை நடப்பவர்கள் பிள்ளையார் பட்டி சென்று வருவது சிறப்பு) சிக்கல்களின் கடுமையை நிச்சயம் குறைக்கும்.

உங்கள் ராசிக்கான ஆடி மாத ராசி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக்  செய்யுங்கள்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close