மங்கலம் தரும் ஸ்ரீசக்ர காமாட்சி

  கோமதி   | Last Modified : 06 Aug, 2018 05:37 pm

sri-chakara-kamatchi

கோயில் நகரம் காஞ்சிபுரம் வைணவ சைவத் திருக்கோயில்கள் நிறைந்த புண்ணிய பூமி. திரும்பும் திசைகள் தோறும் திருக்கோயில் கோபுரங்கள் ,பிரமாண்டமான கோயில் மதில் சுவர்கள் என மனதை பக்திமயமாக்கும் அற்புத தலமே காஞ்சி. இன்றைக்கும் உலகம் முழுவதுமாக நிறைந்திருக்கும் பல லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மகாப்பெரியவா காஞ்சிக் கருணை சங்கராச்சாரியார் தவமிருந்த தலம் இதுவே.

அகில உலகம் காக்கும் அன்னை காஞ்சி காமாட்சியம்மன் காஞ்சிபுரத்தில் அமர்ந்து பலகோடி மக்களின் வாழ்வை வளமாக்கி வருகிறாள்.லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இந்த காஞ்சித் திருத்தலத்தில் காட்சியளிக்கிறார் அன்னை பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் காஞ்சி காமாட்சியம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அன்னை காமாட்சி வீற்றிருக்கும் மண்டபம் காயத்ரி அழைக்கப்படுகிறது. காயத்ரி மண்டபத்தில் ரிஷிகள் பலர் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்கு தான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர்.

ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும்.9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.

நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

நமது பாவங்கள் தீர, கர்மவினை சிக்கல்கள் தொலைய, வாழ்வில் மகிழ்ச்சி தங்க, காக்கும் கடவுள் அன்னை காமாட்சியை வணங்கி வாழ்வோம்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.